அது இல்லனா துபே மாதிரி பிளேயர்ஸ் வந்துருக்க மாட்டாங்க.. ரோஹித்துக்கு பதிலுடன்.. பிசிசிஐக்கு அஸ்வின் கோரிக்கை

Ashwin 2
- Advertisement -

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் ஏலத்தை நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. இம்முறை அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக அனைத்து அணி நிர்வாகிகளிடம் கருத்து கேட்புக் கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. அதில் தக்க வைக்கும் வீரர்களை நான்கிலிருந்து 6 – 8 வரை உயர்த்த வேண்டும் என்று பிசிசிஐக்கு பெரும்பாலான அணிகள் கோரிக்கை வைத்தன.

அதே போல இம்பேக்ட் வீரர் விதிமுறை நீக்கப்பட வேண்டும் என்று சில அணிகள் கோரிக்கை வைத்தனர். சொல்லப்போனால் இம்பேக்ட் வீரர் விதிமுறையால் வாஷிங்டன் சுந்தர், சிவம் துபே போன்ற ஆல் ரவுண்டர்கள் வளர்வதில் பின்னடைவு ஏற்படுவதாக கேப்டன் ரோஹித் சர்மா 2024 ஐபிஎல் தொடரின் போதே தெரிவித்திருந்தார்.

- Advertisement -

அஸ்வின் பதில்:

எனவே அதை நீக்க வேண்டுமென ரோகித் சர்மா, விராட் கோலி, டேவிட் மில்லர் போன்ற பல நட்சத்திர வீரர்கள் கேட்டுக்கொண்டனர். இந்நிலையில் இம்பேக்ட் வீரர் விதிமுறை இல்லாமல் போயிருந்தால் சிவம் துபே, துருவ் ஜுரேல் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்காது என்று ரவிச்சந்திரன் அஸ்வின் பதிலளித்துள்ளார். எனவே அந்த விதிமுறை தொடர வேண்டும் என்று பிசிசிஐக்கு கோரிக்கை வைக்கும் அவர் இது பற்றி கிரிஸ் ஸ்ரீகாந்த் யூடியூப் சேனலில் பேசியது பின்வருமாறு.

“இம்பேக்ட் வீரர் விதிமுறை ஏன் மோசமாக கருதப்படுகிறது. ஏனெனில் அது மூலோபாயத்திற்கு இன்னும் கொஞ்சம் மதிப்பளிக்கிறது. மறுபுறம் அது ஆல் ரவுண்டர்களுக்கு ஊக்கமளிப்பதில்லை என்ற விவாதங்களும் காணப்படுகின்றன. உண்மையில் அவர்களை யாரும் தடுக்கவில்லை. தற்போதைய தலைமுறையில் பேட்ஸ்மேன்கள் பவுலிங் செய்வதில்லை”

- Advertisement -

இம்பேக்ட் பிளேயர் விதிமுறை:

“எனவே அந்த விதிமுறை ஆல் ரவுண்டர்களை ஊக்கப்படுத்தவில்லை என்று அர்த்தமல்ல. கவுண்ட்டி தொடரில் அசத்தும் வெங்கடேஷ் ஐயரை பாருங்கள். அது விளையாட்டில் நியாயமான புதுமையை கொண்டு வரும் மற்றொரு வாய்ப்பாகும். ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் 175-9 என்ற நிலையில் சபாஷ் அகமதை இம்பேக்ட் வீரராக கொண்டு வந்தது. அப்போது 3 பந்தில் 23 ரன்கள் அடித்த அவர் மேட்ச் வின்னரானார்”

இதையும் படிங்க: 100க்கு 34 தான்.. விராட், பும்ரா, ரோஹித்துக்கு ஓய்வளித்த பிசிசிஐயை ஆதாரத்துடன் விமர்சித்த சஞ்சய் மஞ்ரேக்கர்

“பனி போட்டிகளை ஒருதலைபட்சமாக மாற்றும் போது அதனால் உங்களுக்கு எக்ஸ்ட்ரா பவுலிங் ஆப்ஷன் கிடைக்கிறது. அதே போல பேட்டிங்கில் எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன் கிடைக்கிறார். எனவே இம்பேக்ட் வீரர் விதிமுறை இல்லாமல் போயிருந்தால் சபாஷ் அகமது, சிவம் துபே, துருவ் ஜுரேல் ஆகியோர் வாய்ப்பு பெற்றிருக்க மாட்டார்கள். அது மட்டுமே வீரர்களை வளர்ப்பதற்கான வழி என்று நான் சொல்லவில்லை. ஆனால் அந்த விதிமுறை மோசமானதல்ல” என்று கூறினார்.

Advertisement