100க்கு 34 தான்.. விராட், பும்ரா, ரோஹித்துக்கு ஓய்வளித்த பிசிசிஐயை ஆதாரத்துடன் விமர்சித்த சஞ்சய் மஞ்ரேக்கர்

Sanjay Manjrekar 2
- Advertisement -

துலீப் கோப்பை 2024 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 5 முதல் பெங்களூரு மற்றும் அனந்தபூர் நகரங்களில் நடைபெற உள்ளது. அந்தத் தொடரில் ஜஸ்ப்ரித் பும்ராவை தவிர்த்து விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட அனைவரும் விளையாடுவார்கள் என்று ஆரம்பத்தில் செய்திகள் வெளியானது. குறிப்பாக புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கௌதம் கம்பீர் ஃபிட்டாக இருக்கும் அனைவரும் விளையாட வேண்டும் என்ற கோட்பாட்டை கொண்டுள்ளார்.

எனவே அவருடைய பரிந்துரைப்படி ரோகித் மற்றும் விராட் கோலி ஆகியோர் துலீப் கோப்பையில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசியில் துலீப் கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட அணிகளில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அப்போது மரியாதை காரணமாக அவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார்.

- Advertisement -

எவ்வளவு ஓய்வு:

அத்துடன் ஆஸ்திரேலியாவில் விரைவில் 5 போட்டிகள் கொண்ட முக்கியமான டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. எனவே விராட் மற்றும் ரோஹித்தை இங்கே விளையாட வைத்து காயங்களை சந்திப்பதற்கான ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்றும் ஜெய் ஷா தெரிவித்தார். இருப்பினும் அதற்கு சுனில் கவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர்.

இந்நிலையில் கடந்த 5 வருடங்களில் இந்தியா மொத்தமாக 249 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார். அதில் ரோஹித் சர்மா 59%, விராட் கோலி 61%, பும்ரா 34% போட்டிகளில் மட்டுமே விளையாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்னும் ஓய்வு எதற்கு? என்று அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

சஞ்சய் மஞ்ரேக்கர் விமர்சனம்:

எனவே துலீப் கோப்பையில் அவர்கள் விளையாட வேண்டும் என்று தெரிவிக்கும் சஞ்சய் மஞ்ரேக்கர் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “கடந்த 5 வருடங்களில் இந்தியா 249 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் ரோஹித் வெறும் 59% போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். விராட் 61% மற்றும் பும்ரா 34% போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளனர்”

இதையும் படிங்க: ஆஸி ரசிகர்கள் பாராட்டுவாங்க.. ஆனா விராட் கோலியை நான் கணக்கில் எடுத்துக்க மாட்டேன்.. ஃஜெப் லாசன்

“எனவே அவர்களை போதுமான அளவுக்கு ஓய்வெடுத்த இந்திய வீரர்களாகவே நான் பார்க்கிறேன். அதனால் அவர்கள் துலீப் கோப்பை தொடரில் விளையாடுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து அடுத்த மாதம் நடைபெறும் வங்கதேச டெஸ்ட் தொடரில் ரோஹித் மற்றும் விராட் கோலி ஆகியோர் நேரடியாக களமிறங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement