அடுத்த சிஎஸ்கே கேப்டன் சஞ்சு சாம்சன் தான்.. தனது பெயரில் வைரலான பதிவுக்கு அஸ்வின் பதிலடி

- Advertisement -

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடருக்கான ஏலம் வரும் டிசம்பர் மாதம் துபாயில் நடைபெற உள்ளது. அவருக்கு முன்பாக அனைத்து அணிகளும் தேவையான வீரர்களை தக்க வைத்து தேவையற்ற வீரர்களை கழற்றி விட்டுள்ளது. அது போக குஜராத் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை கடைசி நேரத்தில் மும்பை வாங்கியது போல சில முக்கிய வீரர்களை டிரேடிங் முறையில் வாங்கிய நிகழ்வுகளும் அரங்கேறியது.

அந்த வரிசையில் 5 கோப்பைகளை வென்று நடப்பு சாம்பியனாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் 16.25 கோடிக்கு வாங்கப்பட்ட இங்கிலாந்தின் நட்சத்திர ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை விடுவித்தது. அதை விட சென்னை வெளியிட்ட தக்க வைத்த வீரர்களின் பட்டியலில் தோனி முதல் வீரராக இடம் பிடித்தது ரசிகர்களின் மகிழ்ச்சியடைய வைத்தது.

- Advertisement -

அஸ்வின் பதிலடி:
ஏனெனில் 2008 முதல் சென்னை அணிக்காக விளையாடி வரும் அவர் கடந்த சீசனில் முழங்கால் வலியுடன் விளையாடியதால் அடுத்த சீசனில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது. இருப்பினும் தற்போது 41 வயதை கடந்துள்ள அவர் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு குணமடைந்து வருவதால் மீண்டும் விளையாடுவார் என்று ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆனால் எப்படி இருந்தாலும் விரைவில் ஓய்வு பெற போகும் அவருக்கு பதிலாக சென்னை அணியை வழி நடத்தப் போவது யார் என்பதே அந்த அணி ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாகவும் கேள்வியாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னையின் அடுத்த கேப்டனாக கேரளாவை சேர்ந்த நட்சத்திரம் சஞ்சு சாம்சன் இருப்பார் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் சொன்னதாக ட்விட்டரில் ஒரு பதிவு வைரலானது.

- Advertisement -

அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு. “சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்படுவதற்கு சஞ்சு சாம்சன் அணுகப்பட்டது கிட்டத்தட்ட முடிந்து விட்டது. ஆனால் அதை சஞ்சு சாம்சன் மறுத்து விட்டார். ஆன்ன்ல் கண்டிப்பாக வருங்காலத்தில் இதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது” என்று அஸ்வின் தன்னுடைய யூடியூப் சேனலில் தெரிவித்ததாக அந்த பதிவு வைரலானது.

இதையும் படிங்க: நல்லா புரிஞ்சிகிட்டேன்.. 2023 உ.கோ ஃபைனலில் ரோஹித் என்னை எடுக்காத காரணம் அது தான்.. அஸ்வின் ஓப்பன்டாக்

அதை கவனித்த ரவிச்சந்திரன் அஸ்வின் உண்மையாகவே தாம் அப்படி சொல்லாத காரணத்தால் “போலியான செய்தி. தயவு செய்து பொய்யான செய்தியில் என்னுடைய பெயரை சேர்க்காதீர்கள்” என அந்த ரசிகருக்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுவது போல ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் தங்களுடைய கேப்டனாக சஞ்சு சாம்சனை ஏற்கனவே தக்க வைத்துள்ளது. மேலும் அவருடைய தலைமையில் ராஜஸ்தான் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடி வருகிறார். சொல்லப்போனால் தோனிக்கு அடுத்தபடியாக ருதுராஜ் சென்னை கேப்டனாக இருப்பார் என்று அஸ்வின் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement