நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது நாளை மார்ச் 28-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. மொத்தம் பத்து அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையை வெல்லப்போவது யார்? என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்த தொடருக்கான ஏற்பாடுகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தோனியின் இடம் குறித்து பேசிய : ரவிச்சந்திரன் அஷ்வின்
இந்நிலையில் இந்த 2026 ஐபிஎல் தொடர் தான் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனிக்கு கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் தற்போது 44 வயதாகும் தோனி இதற்கு மேலும் விளையாட முடியாது என்றும் அது மிக கடினம் என்று பலரும் கூறுகின்றனர்.
மேலும் அவரது இடத்தை நிரப்ப சஞ்சு சாம்சன் வந்துவிட்டார் என்பதாலும் இதுவே அவருக்கு கடைசி தொடராக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தொடரில் தோனி விளையாடப்போவது குறித்து பல்வேறு கருத்துக்களை பல்வேறு முன்னாள் வீரர்களும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இம்பேக்ட் பிளேயராக மட்டுமே தோனி இருந்தால் அவர் விளையாடக்கூடாது என ரவிச்சந்திரன் அஸ்வின் சில கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : தோனி இம்முறை இம்பேக்ட் பிளேயராக மட்டும் தான் இருக்க வேண்டும் என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். அவர் பிளேயிங் லெவனில் இடம்பெற்று விளையாட வேண்டும்.
இதையும் படிங்க : தோனியின் இந்த பயணம் இளம் வீரர்களுக்கு நிச்சயம் பெரிய ஊக்கமாக இருக்கும் – சவுரவ் கங்குலி பேச்சு
ஒருவேளை அதுமுடியாது என்றால் இந்த தொடரின் ஒரு போட்டியில் கூட அவர் விளையாடக்கூடாது. அதுதான் சரியான முடிவாக இருக்கும். சிஎஸ்கே அணியின் தற்போதைய பௌலிங் யூனிட்டை களத்தில் நின்று வழிநடத்துவதற்கு தோனி மிகவும் தேவையானவராக இருப்பார் என ரவிச்சந்திரன் அஷ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.



