- Advertisement -
உலக கிரிக்கெட்

பிக் பாஷ் தொடரில் இருந்து விலகிய ரவிச்சந்திரன் அஷ்வின்.. காரணம் இதுதான் – விவரம் இதோ

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த 2024-ஆம் ஆண்டின் போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடுவேன் என்று அறிவித்த அவர் 2025 ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார். இருந்தாலும் அவர் எதிர்பார்த்தபடி ஐபிஎல் தொடரில் அவரால் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த முடியவில்லை.

பிக் பாஷ் தொடரில் இருந்து விலகிய ரவிச்சந்திரன் அஷ்வின் :

அதனால் அடுத்த 2026 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக அவர் சென்னை அணியில் இருந்து வெளியேற்றப்பட இருக்கிறார் என்ற தகவலும் அதிகளவு வைரலாகி இருந்தது. அதனை தொடர்ந்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் முன்பாக தானாக முன்வந்து சென்னை அணியிலிருந்து வெளியேறிய ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

- Advertisement -

அதற்கு அடுத்து தான் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் சர்வதேச நாடுகளில் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் பங்கேற்று விளையாடுவேன் என்று தனது விருப்பத்தை அறிவித்திருந்தார். அதன்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் டி20 லீக்கில் அதிக விலையான ஒரு கோடி ரூபாய்க்கு தன் பெயரை பதிவிட்டிருந்தார்.

ஆனால் அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. பின்னர் தொடர்ந்து பிக் பாஷ் லீக்கில் தனது பெயரினை அவர் பதிவு செய்திருந்த வேளையில் சிட்னி தண்டர்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்திருந்தது. இதன் காரணமாக பிக் பாஷ் லீக் தொடரில் விளையாடும் முதல் இந்திய வீரராக அவர் சாதனை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் பிக் பாஷ் லீக் தொடரில் இருந்து தான் விலகுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்துள்ளார். அதற்கு காரணம் யாதெனில் : முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாகவே இந்த சீசனில் அவர் விளையாட மாட்டார் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : சொன்ன மாதிரியே உ.கோ ஜெய்ச்சுட்டோம்.. உங்க ஆசையை நிறைவேற்ற காத்திருக்கேன் கவாஸ்கர் சார்.. ஜெமிமா பதில்

பிக் பாஷ் தொடருக்காக சென்னையில் அவர் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும்போது முழங்கால் பகுதியில் காயமடைந்ததால் அதற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை கருத்தில் காண்பித்து அவர் பிக் பாஷ் தொடரில் இருந்து விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -