சொன்ன மாதிரியே உ.கோ ஜெய்ச்சுட்டோம்.. உங்க ஆசையை நிறைவேற்ற காத்திருக்கேன் கவாஸ்கர் சார்.. ஜெமிமா பதில்

- Advertisement -

ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பை தொடரை இந்திய கிரிக்கெட் அணி தங்களது சொந்த மண்ணில் வென்று சாதனை படைத்தது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்ற அந்தத் தொடரில் லீக் சுற்றில் தடுமாற்றமாக விளையாடிய இந்தியா ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்தது. இருப்பினும் ஹாட்ரிக் தோல்விக்குப்பின் சிறப்பாக விளையாடிய இந்தியா செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றது.

அப்போட்டியில் 7 முறை உலகச் சாம்பியன் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா ஃபைனலுக்கு சென்றது. குறிப்பாக ஆஸ்திரேலியா நிர்ணயித்த 339 ரன்களை திருப்பி அடித்த இந்தியா ஐசிசி நாக் அவுட் போட்டியில் 300+ ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்த முதல் அணியாக உலக சாதனை படைத்தது. அந்த வெற்றிக்கு ஜெமிமா ரோட்ரிகஸ் சதத்தை அடித்து 129* ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

கவாஸ்கரின் கோரிக்கை:

ஆரம்பக்கட்ட போட்டிகளில் டக் அவுட்டானதால் அதிரடியாக நீக்கப்பட்ட அவருக்கு கடைசிக்கட்ட போட்டிகளில் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் முக்கியமான அரையிறுதியில் சதத்தை அடித்த அவர் ஆஸ்திரேலியாவை நாக் அவுட்டாக்கி இந்தியாவை ஃபைனலுக்கு அழைத்துச் சென்றார். அப்போது ஒருவேளை இந்தியா உலகக்கோப்பை வென்றால் உங்களுடன் பாட்டு பாட விரும்புவதாக அவருக்கு சுனில் கவாஸ்கர் கோரிக்கை வைத்தார்.

கிட்டார் வாசிப்பதில் பிரியம் கொண்ட ஜெமிமா அரை சதமடிக்கும் போது அதை வாசிப்பது போல் கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதனால் ஏற்கனவே ஒருமுறை பிசிசிஐ விருதுகள் வழங்கும் விழாவில் கிட்டார் வாசித்த அவருடன் இணைந்து சுனில் கவாஸ்கர் பாடினார். அதே போல இம்முறை ஃபைனலில் இந்தியா உலகக் கோப்பை வென்றால் ஜெமிமாவுடன் பாடி வெற்றியைக் கொண்டாட விரும்புவதாக கவாஸ்கர் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

ஜெமிமா பதில்:

கடைசியில் அவருடைய விருப்பம் போலவே இறுதிப் போட்டியில் தெனாப்பிரிக்காவை தோற்கடித்த இந்தியா முதல் முறையாக மகளிர் உலகக் கோப்பையை வென்றது. இந்நிலையில் சொன்ன மாதிரியே இந்தியா உலகக் கோப்பை வென்றதால் உங்களுடன் இணைந்து பாடத் தயாராக இருப்பதாக கவாஸ்கருக்கு இன்ஸ்டாகிராமில் ஜெமிமா பதிலளித்துள்ளார். இது பற்றி அவர் தெரிவித்துள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: கடைசி 2 போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற அவர் ரொம்ப முக்கியம்.. கம்பீரின் முடிவு என்ன? – விவரம் இதோ

“ஹாய் சுனில் கவாஸ்கர். உங்களுடைய செய்தியை நான் பார்த்தேன். ஒருவேளை இந்தியா உலகக் கோப்பையை வென்றால் நாம் இருவரும் சேர்ந்து பாட்டு பாடுவோம் என்று நீங்கள் தெரிவித்திருந்தீர்கள். எனவே நான் என்னுடைய கிட்டாருடன் தயாராக இருக்கிறேன். நீங்கள் உங்களுடைய ஒலிவாங்கியுடன் தயாராக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். லவ் யூ சார், ஆதரவுக்கு நன்றி” என்று கையில் கிட்டாரை வைத்துக்கொண்டே கவாஸ்கருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisement