நீங்க ஸ்லெட்ஜிங் செய்றது என்ன புதுசா? பாத்துக்கலாம் வாங்க – ஸ்டீவ் ஸ்மித், இயன் ஹீலிக்கு அஷ்வின் கொடுத்த பதிலடி என்ன

Ashwin-3
- Advertisement -

வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 9 முதல் நாக்பூரில் துவங்குகிறது. வரும் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற இத்தொடரில் 3 போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்கிறது. ஆனால் ஏற்கனவே ஃபைனல் வாய்ப்பை உறுதி செய்து விட்டதால் 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் தங்களை சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியாவை இம்முறை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து 2004க்குப்பின் ஒரு டெஸ்ட் தொடரை வென்று தங்களை உலகின் நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற வெறியுடன் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது.

Smith

- Advertisement -

பொதுவாக கிரிக்கெட்டில் ஸ்லெட்ஜிங் செய்து வெற்றி காண்பது ஆஸ்திரேலியர்களுக்கு மிகவும் கைவந்த கலை என்பார்கள். அதை இந்த தொடர் துவங்குவதற்கு முன்பாகவே ஆரம்பித்த ஸ்டீவ் ஸ்மித், உஸ்மான் கவாஜா ஆகியோர் ஒரு மாதத்திற்கு முன்பாகவே ஆரம்பித்து விட்டனர். அதாவது கடைசியாக கடந்த 2017இல் இந்திய மண்ணில் நிகழ்ந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடருக்கு முன்பாக தாங்கள் விளையாடிய பயிற்சி போட்டியில் பச்சை புற்கள் நிறைந்த பிட்ச் கொடுக்கப்பட்டதாகவும் ஆனால் முதன்மையான டெஸ்ட் தொடரில் சுழலுக்கு சாதகமான பிட்ச் இருந்ததாகவும் தெரிவித்த அவர்கள் இம்முறை இந்தியாவிடம் நம்பிக்கையையும் நியாயத்தையும் எதிர்பார்க்க முடியாது என்று கூறினார்கள்.

அஷ்வின் பதிலடி:
அதற்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் வீரர் இயன் ஹீலி இம்முறையும் சுழலுக்கு சாதகமான பிட்ச் அமைக்கப்பட்டிருக்கும் என்பதால் நிச்சயமாக ஆஸ்திரேலியா வெல்லாது என்றும் இந்தியா தான் 2 – 1 (4) என்ற கணக்கில் தொடரை வெல்லும் என்று வெளிப்படையாக விமர்சித்திருந்தார். அப்படி ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் போட்டி துவங்குவதற்கு முன்பாகவே இப்படி பேசியது இந்திய ரசிகர்களை அதிருப்த்தியில் ஆழ்த்தியது. இந்நிலையில் ஆஸ்திரேலியர்கள் ஸ்லெட்ஜிங் செய்வது ஒன்று புதிதல்ல என்று பதிலடி கொடுத்துள்ள ரவிச்சந்திரன் அஷ்வின் 2017 சுற்றுப்பயணத்தில் அமைக்கப்பட்ட பிட்ச்கள் வேண்டுமென்றே செயற்கையாக உருவாக்கப்பட்டதல்ல என்று தெரிவித்துள்ளார்.

ian healy virat kohli

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலியா இம்முறை எந்த பயிற்சி போட்டியிலும் விளையாடவில்லை என்பது புதிதல்ல. சொல்லப்போனால் இந்தியாவும் சில வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது பயிற்சி போட்டிகளை தவிர்ப்பது வழக்கமாகும். ஏனெனில் இந்தியாவின் சர்வதேச கால அட்டவணை மிகவும் நெருக்கமாக இருப்பதால் பயிற்சி போட்டியில் விளையாடுவதற்கான நேரம் அமைவதில்லை”

- Advertisement -

“இருப்பினும் 2017 தொடரில் ப்ராபோர்ன் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த பயிற்சி போட்டி பிட்ச் முதல் போட்டியில் அமைக்கப்பட்டிருந்த பிட்ச்க்கு சம்பந்தமில்லாததாக இருந்ததாக ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்தார். அவர் கூறுவது போல புனேவில் தாறுமாறாக சுழன்ற பிட்ச் இருந்தது உண்மை தான். மேலும் பயிற்சி போட்டியில் பச்சை புற்கள் நிறைந்த பிட்ச் கொடுக்கப்பட்டது என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இதை யாரும் திட்டமிட்டு செய்வதில்லை. அதை விட எப்போதும் தொடர் துவங்குவதற்கு முன்பாக ஸ்லெட்ஜிங் செய்து மனதளவில் போரை துவக்குவதற்கு ஆஸ்திரேலியா பெயர் போனவர்கள்”

Ashwin

“அவர்கள் அவ்வாறு செய்வதை மிகவும் விரும்புகிறார்கள். அது அவர்களுடைய ஒரு வகையான ஸ்டைல். அந்த வகையில் இத்தொடர் துவங்குவதற்கு முன்பாக முன்னாள் வீரர் இயன் ஹீலி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்தியாவில் ஆஸ்திரேலியா தடுமாற வேண்டும் என்பதற்காக முதன்மை போட்டியில் இருக்கும் பிட்ச்கள் பயிற்சி போட்டிகளில் கொடுக்கக் கூடாது என்பதில் இந்தியா உறுதியுடன் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். மேலும் ஆஸ்திரேலியாவின் அணுகுமுறை மட்டுமே சரி என்று அவர் பேசியிருந்தார்”

இதையும் படிங்க: என்னாங்க பெரிய உம்ரான் மாலிக்? எங்ககிட்ட லோக்கலில் 1000 உம்ரான் மாலிக் இருக்காங்க – வம்பிழுக்கும் முன்னாள் பாக் வீரர்

“அவரது கருத்துக்கள் அனலை உண்டாக்கியுள்ளது. இது பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர நண்பர்களே. அதனால் இது போன்ற பெரிய தொடரில் அனல் பறக்க வேண்டாமா? அவரைப் போலவே ஸ்மித், கவஜா, லபுஸ்ஷேன், மாட் ரென்ஷா போன்றவர்களும் இது போன்ற கருத்தை தெரிவித்துள்ளார்கள்” என்று கூறினார். அதாவது விளையாடுவதற்கு முன்பே வம்பிழுப்பது ஆஸ்திரேலியர்களுக்கு புதிதல்ல என்று தெரிவிக்கும் அஷ்வின் அதற்காக இந்தியா வளைந்து கொடுக்காமல் களத்தில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்து பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement