IND vs BAN : ஆல் ரவுண்டராக அபார வெற்றி பெற வைத்த அஷ்வின் – டெஸ்ட் கிரிக்கெட்டில் படைத்த புதிய உலக சாதனை

Ashwin
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலையில் டிசம்பர் 22ஆம் தேதியன்று தாக்கா கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய 2வது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 227 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக மோனிமுள் ஹைக் 84 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் தலா 4 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா ஒரு கட்டத்தில் 94/4 என ஆரம்பத்திலேயே தடுமாறினாலும் 5வது விக்கெட்டுக்கு 159 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றிய ரிஷப் பண்ட் 93 ரன்களும் ஸ்ரேயாஸ் ஐயர் 87 ரன்களும் எடுத்து காப்பாற்றியதால் 314 ரன்கள் எடுத்தது. வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக டைஜுல் இஸ்லாம் மற்றும் சாகிப் அல் ஹசன் 4 விக்கெட் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய அந்த அணி மீண்டும் இந்தியாவின் திறமையான பந்து வீச்சில் 231 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

அஷ்வின் உலக சாதனை:
அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 73 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக அக்சர் பட்டேல் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 145 என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு ஒருநாள் தொடரில் தோல்வி பரிசளித்த மெஹதி ஹசன் சுழலில் சிக்கிய கில் 7, புஜாரா 6, விராட் கோலி 1 என முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். அதனால் 45/4 என திணறிய இந்தியாவுக்கு 4வது நாளில் 100 ரன்கள் தேவைப்பட்ட போது காப்பாற்றுவார் என்று கருதப்பட்ட ரிஷப் பண்ட் 9 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்த நிலையில் மறுபுறம் போராடிய அக்சர் பட்டேல் 34 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதனால் 74/7 என திண்டாடிய இந்தியாவை அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 29* ரன்கள் குவித்து வெற்றிக்கு போராடிய நிலையில் கடைசி நேரத்தில் அதிரடியாக செயல்பட்ட அஸ்வின் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 42* ரன்கள் குவித்து அபார பினிஷிங் கொடுத்தார். அதனால் 145/7 ரன்கள் எடுத்த இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று 2 – 0 (2) என்ற கணக்கில் வங்கதேசத்தை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து ஒயிட் வாஷ் வெற்றியுடன் கோப்பையை முத்தமிட்டது.

- Advertisement -

அதனால் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி வரும் வாய்ப்பையும் இந்தியா தக்க வைத்துக் கொண்டது. இப்போட்டியில் 145 எனும் எளிய இலக்கை துரத்தும் போது டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தடவலாக செயல்பட்டதால் தோல்வியின் பிடில் சிக்கிய இந்தியாவை ஸ்ரேயாஸ் ஐயருடன் 8வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் காப்பாற்றிய அஷ்வின் அனைவரது பாராட்டுகளை அள்ளி வருகிறார். குறிப்பாக வரலாற்றில் வங்கதேசத்துக்கு எதிராக சந்திக்க காத்திருந்த முதல் தோல்வியிலிருந்து இந்தியாவை காப்பாற்றிய அவர் பெரிய அவமானத்தை தவிர்த்தார்.

மேலும் 12, 46* மற்றும் 4, 2 என இப்போட்டியில் மொத்தமாக 58 ரன்களும் 6 விக்கெட்டுகள் எடுத்து ஆல் ரவுண்டராக அசத்திய அஷ்வின் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அதை விட 9வது இடத்தில் களமிறங்கி 42* ரன்கள் குவித்த அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட போட்டியில் 9வது களமிறங்கி அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற வெஸ்ட் இண்டீசின் வின்சென்ட் பெஞ்சமின் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. ரவிச்சந்திரன் அஷ்வின் : 42*, வங்கதேசத்துக்கு எதிராக, 2022
2. வின்சென்ட் பெஞ்சமின் : 40*, பாகிஸ்தானுக்கு எதிராக, 1988
3. சிட்னி பெர்ன்ஸ் (இங்கிலாந்து): 38*, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 1908

இதையும் படிங்க: பென் ஸ்டோக்ஸை எடுத்ததுலாம் சரிதான். ஆனா சி.எஸ்.கே பெரிய தப்பு பண்ணிட்டாங்க – வாசிம் ஜாபர் கருத்து

முன்னதாக 88 போட்டிகளில் 3043* ரன்களையும் 449* விக்கெட்டுகளையும் எடுத்துள்ள அஸ்வின் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 3000+ ரன்கள் மற்றும் 400+ விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையும் உலக அளவில் ரிச்சர்ட் ஹாட்லிக்கு பின் (86 போட்டிகள்) 2வது வீரர் என்ற பெருமையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச் சிறந்த சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டராக அஷ்வின் அசத்தி வருவது தமிழக ரசிகர்களுக்கு பெருமையாகும்.

Advertisement