பென் ஸ்டோக்ஸை எடுத்ததுலாம் சரிதான். ஆனா சி.எஸ்.கே பெரிய தப்பு பண்ணிட்டாங்க – வாசிம் ஜாபர் கருத்து

Wasim-Jaffer
- Advertisement -

டிசம்பர் 23-ஆம் தேதி கொச்சியில் நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தில் அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கான வீரர்களின் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் அனைத்து அணிகளை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்துகொண்டு தங்களது அணிகளுக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு ஏலத்தில் எடுத்தனர். இந்த ஏலத்தில் எந்தெந்த வீரர்கள், எந்தெந்த அணிகளுக்கு செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்தது.

CSK-Auction

- Advertisement -

அந்தவகையில் இந்த மினி ஏலத்தில், சாம் கரன், கேமரூன் க்ரீன், பென் ஸ்டோக்ஸ், நிக்கோலஸ் பூரான் போன்ற வீரர்கள் அதிக தொகைக்கு ஏலத்தில் சென்றனர். குறிப்பாக சென்னை அணி இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரனை எடுக்க தவறினாலும் பென் ஸ்டாக்ஸை 16 கோடிக்கும் மேல் விலைகொடுத்து வாங்கியது.

இந்த ஏலத்தில் பென் ஸ்டோக்ஸ் சென்னை அணிக்காக வாங்கப்பட்டதும், தோனிக்கு அடுத்து அவர்தான் சென்னை அணியின் கேப்டன் எனவும், பென் ஸ்டோக்ஸ் சென்னை அணிக்கு சரியான ஒரு தேர்வு சென்றும் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான வாசிம் ஜாபர் சென்னை அணி தவறு செய்து விட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

Ben-Stokes

அந்தவகையில் அவர் கூறுகையில் : சென்னை அணி பென் ஸ்டாக்ஸை ஏலத்தில் எடுத்து சரிதான். ஆனாலும் சென்னை வீரர்களின் தேர்வில் தவறு செய்துவிட்டது. ஏனெனில் கடந்த ஆண்டு சென்னை அணி இரண்டாவது இன்னிங்சின் போது எதிரணியை கட்டுப்படுத்த திணறியது. இலக்கு எவ்வளவாக இருந்தாலும் அவர்களால் எதிரணியை தடுத்த நிறுத்த பந்துவீச்சாளர்கள் இன்றி கஷ்டப்பட்டனர்.

- Advertisement -

இந்நிலையில் அவர்கள் பென் ஸ்டாக்ஸை விலைக்கு வாங்கியதால் அணியின் டேவான் கான்வே, ஸ்டோக்ஸ் மற்றும் மொயின் அலி ஆகியோர் கட்டாயமாக இடம்பெறுவார்கள். அதேவேளையில் மீதமுள்ள ஒரு வெளிநாட்டு வீரர்களில் ஒரு பவுலரை மட்டுமே விளையாட வைக்க முடியும்.

இதையும் படிங்க : IND vs BAN : அதிர்ஷ்டத்துடன் சரித்திர அவமானதிலிருந்து இந்தியாவை காப்பாற்றிய அஷ்வின் – திரில் வெற்றி பெற்றது எப்படி?

அப்படி அணியை தேர்வு செய்யும் பட்சத்தில் அவர்களால் டெத் ஓவர்களில் பந்துவீசும் பவுலர்களாக யாரை தேர்வு செய்வார்கள் என்பது தெரியவில்லை. ஏற்கனவே சென்னை அணி பந்துவீச்சாளர்கள் இல்லாமல் கஷ்டப்படும் வேளையில் இந்த தேர்வு மேலும் அவர்களது அணிக்கு சிக்கலை சேர்த்துள்ளதாக வாசிம் ஜாபர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement