ஒரு பந்தை அடிக்க விராட் கோலி 7 டிப்ஸ் கொடுத்தாரு – 2022 டி20 உ.கோ பாக் போட்டியின் ஸ்வாரஸ்ய பின்னணியை பகிர்ந்த அஸ்வின்

Ravichandran Ashwin.jpeg
- Advertisement -

உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக துவங்குகிறது. அதில் சொந்த மண்ணில் வலுவான அணியாக கருதப்படும் இந்தியா 2011 போல கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துமா என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதற்கு நிகராக அக்டோபர் 15ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வென்று இந்தியா தங்களின் கௌரவத்தை காப்பாற்றுமா என்ற எதிர்பார்ப்பும் இந்திய ரசிகர்களிடம் அதிகமாக இருக்கிறது. ஏனெனில் 1992 முதல் இதுவரை உலக கோப்பைகளில் சந்தித்த 7 போட்டிகளிலும் வென்றுள்ள இந்தியா தொடர்ந்து வெற்றி நடை போட்டு வருகிறது.

- Advertisement -

முன்னதாக 2021 டி20 உலக கோப்பையில் முதல் முறையாக வெற்றி கண்ட பாகிஸ்தானை மீண்டும் கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பையில் விராட் கோலி சரித்திர இன்னிங்ஸ் விளையாடி தோற்கடித்தது மறக்கவே முடியாது. உலகப் புகழ்பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் பாகிஸ்தான் நிர்ணயித்த 160 ரன்களை சேசிங் செய்கையில் ரோகித், ராகுல், சூரியகுமார் என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே சொதப்பியதால் 31/4 என சரிந்த இந்தியா தோல்வியின் பிடியில் சிக்கியது.

ஒரு பந்துக்கு 7 டிப்ஸ்:
அப்போது பாண்டியாவுடன் இணைந்து சரித்திர இன்னிங்ஸ் விளையாடிய விராட் கோலி 82* (53) ரன்கள் அடித்து இந்தியாவின் மானத்தை காப்பாற்றி வெற்றி பெற வைத்தார். அந்த போட்டியில் பல மறக்க முடியாத தருணங்கள் இருந்தாலும் கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் ஒய்ட் ஸ்டம்ப்பிங் வலையில் சிக்கி செய்த தவறை செய்யாத அஸ்வின் கூலாக ஒதுங்கி நின்று கடைசிப் பந்தை தூக்கி அடித்து மாஸ் ஃபினிஷிங் கொடுத்து இந்தியாவின் வரலாற்று வெற்றியை உறுதி செய்தார்.

Ashwin

இந்நிலையில் அந்தப் போட்டியில் கடைசிப் பந்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு விராட் கோலி 7 வெவ்வேறு விதமான ஆலோசனைகளை கொடுத்ததாக தெரிவிக்கும் அஸ்வின் தாம் அதையெல்லாம் கவலைப்படாமல் தம்முடைய ஸ்டைலில் விளையாடியதாக கூறியுள்ளார். அத்துடன் ஒய்ட் சென்ற பந்து கொஞ்சம் திரும்பி தம்முடைய காலில் அடித்திருந்தால் கேரியரே முடிந்திருக்கும் என்று கலகலப்பாக தெரிவிக்கும் அவர் இது பற்றி யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“தினேஷ் கார்த்திக் மிகவும் கடினமான வேலையை என்னை செய்ய சொன்னதால் நான் அவருக்கு சாபம் விட்டேன். அவரை நான் திட்டிக்கொண்டே மைதானத்திற்குள் நுழைந்த போது என்ன செய்யப் போகிறேன் என்பதை உணர்ந்தேன். மேலும் அந்த சமயத்தில் விண்ணதிற முழங்கிய அவ்வளவு ரசிகர்கள் நிறைந்த கூட்டத்தை நான் பார்த்ததில்லை. அந்த சூழ்நிலையில் அந்த ஒரு பந்தை எதிர்கொள்வதற்கு விராட் கோலி எனக்கு 7 ஆலோசனைகளை தெரிவிப்பது போல் என்னிடம் பேசினார்”

Ashwin

 

- Advertisement -

“அதற்கு ஒருவேளை நீங்கள் சொன்ன ஷாட்டுகளை என்னால் அடிக்க முடிந்தால் நான் 8வது இடத்தில் விளையாட மாட்டேன் என்பதை அவரிடம் சொல்லாமல் எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். அப்போது விராட் கோலியின் கண்களைப் பார்த்த போது எனக்கு “சரி இவர் வேறு ஏதோ ஒரு கிரகத்தில் இருக்கிறார் நாம் பூமியிலேயே விளையாடுவோம்” என்று தோன்றியது. அதைத்தொடர்ந்து ஒய்ட் வீசப்பட்டதும் அப்போட்டியில் வெல்வோம் என்பது எனக்கு தெரியும். பொதுவாக கிரிக்கெட் பல்வேறு வகைகளில் உங்களுக்கு செய்திகளை கொடுக்கும்”

இதையும் படிங்க:ஆஷஸ் 2023 : ரோஹித் சர்மாவை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித் – 2 ஆவது டெஸ்டிலும் அசத்தல்

“அந்த வகையில் அந்த பந்து எனக்கு நிறைய நேர்மறையான எண்ணத்தை ஏற்படுத்தி போட்டியை நாம் வென்று விட்டோம் என்ற உணர்வை கொடுத்தது. மேலும் ஒவ்வொரு நாள் தூங்க செல்லும் போதும் அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பார்க்கும் போதும் ஒருவேளை ஒய்ட் பந்து சற்று திரும்பி என்னுடைய காலில் அடித்துருந்தால் என்னவாகியிருக்கும் என்று நினைத்துப் பார்ப்பேன். அப்படி மட்டும் நடந்திருந்தால் என்னுடைய கேரியர் முடிந்திருக்கும். அப்படித்தான் நான் விராட் கோலி விளையாடிய ஒரு மகத்தான போட்டியை பார்த்தேன்” என்று கூறினார்.

Advertisement