விமர்சிப்பது ஈஸி சார், இந்த சீரிஸ்ல நமக்கு கிடைச்ச அந்த நன்மையும் கொஞ்சம் பாருங்க – வெங்கடேஷ் பிரசாத்துக்கு அஸ்வின் பதிலடி

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலில் நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் வென்ற இந்தியா கடைசியாக நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரில் 3 – 2 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்து ஏமாற்றத்துடன் நாடு திரும்பியுள்ளது நிறைய விமர்சனங்களை எழுப்பியுள்ளது. ஏனெனில் ரோகித் சர்மா போன்ற சீனியர்கள் இல்லாமல் 2024 டி20 உலகக் கோப்பைக்கு தேவையான வீரர்களை கண்டறியும் நோக்கத்தில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா முதலிரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்தாலும் அதற்கடுத்த 2 போட்டிகளில் வென்று பதிலடி கொடுத்தது. ஆனாலும் கடைசி போட்டியில் தோற்ற இந்தியா வரலாற்றில் முதல் முறையாக 5 போட்டிகள் கொண்ட ஒரு டி20 தொடரில் தலைகுனியும் தோல்வியை சந்தித்தது.

அதை விட தற்சமயத்தில் உலக கோப்பைக்கு தகுதி பெறாமல் பலவீனமான அணியாக இருக்கும் வெஸ்ட் இண்டீஸிடம் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக திகழும் இந்தியா 2016க்குப்பின் முதல் முறையாக தோல்வியை சந்தித்தது. அதனால் கடுமையாக எழுந்த விமர்சனங்களுக்கு மத்தியில் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் உலகக் கோப்பைக்கு தகுதி பெறாத அணியிடம் இந்தியா தோற்றதாக ட்விட்டரில் வழக்கம் போல சாடினார். குறிப்பாக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சமீப காலங்களாகவே இந்தியா சாதாரண அணியாக செயல்படுவதாக தெரிவிக்கும் அவர் தற்போதைய அணியில் இருப்பவர்களிடம் வெற்றிக்கான திறமை மற்றும் பசி இல்லை என்று விமர்சித்தார்.

- Advertisement -

அஸ்வின் பதிலடி:
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸிடம் தோற்றத்திற்காக விமர்சிப்பதை புரிந்து கொள்ள முடிவதாக தெரிவிக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் அதே சமயம் இத்தொடரில் களமிறங்கியதால் கிடைத்த அனுபவத்தையும் பாடத்தையும் கொஞ்சம் யோசிக்குமாறு வெங்கடேஷ் பிரசாத் போன்ற விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். குறிப்பாக இந்திய பேட்டிங் வரிசையில் தற்போது தரமான இடது கை பேட்ஸ்மேன்கள் இல்லாத நிலைமையில் ஜெய்ஸ்வால், திலக் வர்மா போன்ற 2 இளம் வீரர்கள் கிடைத்தது உட்பட இந்த தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த நன்மைகளையும் பார்க்குமாறு தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

“இந்த சர்வதேச டி20 தொடரில் நிறைய நேர்மறையான அம்சங்களும் கிடைத்தன. கடந்த டி20 உலக கோப்பைக்கு தகுதி பெறாத ஒரு அணியிடம் இந்தியா இந்த தொடரில் தோல்வியை சந்தித்துள்ளதால் அது பற்றி சமூக வலைதளங்களில் விமர்சிப்பது மிகவும் எளிதானதாகும். வெஸ்ட் இண்டீஸ் அடுத்ததாக நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கும் தகுதி பெறவில்லை. இந்த சமயத்தில் உங்களுக்கு நான் சில தகவல்களை கொடுக்க விரும்புகிறேன் நண்பர்களே. அதாவது நான் ஆதரவு கொடுங்கள் என்று பேசப்போவதில்லை”

- Advertisement -

“அவை அனைத்தும் அடுத்த பேச்சுகளாகும். அதையும் தாண்டி ஒரு இளம் வீரராக நீங்கள் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது உங்களுக்கு நிறைய சவால்கள் காத்திருக்கும். பொதுவாக ஒவ்வொரு நாட்டிலுமே வெளிநாட்டவர்க்கு தெரியாத சில ரகசியங்கள் இருக்கும். அது வெளிநாட்டு வீரர்களை விட உள்ளூரில் இருக்கும் வீரர்களுக்கு தான் அதிகமாக தெரியும். குறிப்பாக நீங்கள் அனுபவமற்ற இளம் வீரராக இருக்கும் போது வெளிநாட்டு சூழ்நிலைகள் தெரியாது”

“அந்த வகையில் நான் என்னுடைய இளம் வயதில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா சென்று விளையாடும் போது சிலவற்றை முதலில் கற்க வேண்டியிருந்தது. அதே போலவே இந்து தொடரில் விளையாடிய இளம் வீரர்களுக்கு நல்ல அனுபவங்கள் கிடைத்திருக்கும். அது அவர்களை வருங்காலங்களில் சிறந்தவர்களாக முன்னேற உதவும். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 3 – 2 என்ற கணக்கில் தோற்றதால் அனைவரும் ஏமாற்றமடைந்து விமர்சிக்கிறார்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது”

இதையும் படிங்க:அட போங்கப்பா வெ.இ டி20ல தோத்தா என்ன? அதுல சாதிச்ச நமக்கு 3 வெற்றி கிடைச்சுருக்கு – டிராவிட் பெருமையான பேட்டி

“அது நியாயமும் கூட என்று நினைக்கிறேன். ஆனாலும் இந்த தோல்வியை 2வது கோணத்தில் பார்க்க வேண்டும். இத்தொடரால் நமது வீரர்களுக்கு நிறைய அனுபவமும் கிடைத்திருக்கும் என்பதை மறக்க கூடாது” எனக் கூறினார். இதைத் தொடர்ந்து அயர்லாந்துக்கு எதிராகவும் ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் இளம் வீரர்களுடன் இந்தியா களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.

Advertisement