- Advertisement -
ஐ.பி.எல்

2026 ஐ.பி.எல் சீசனின் முதல் போட்டியிலேயே இந்த அதிசயம் நடக்க வாய்ப்பிருக்கு – அஷ்வின் கணிப்பு

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 19 சீசனானது இன்று மார்ச் 28-ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் துவங்குகிறது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள காத்திருக்கிறது. இதன் காரணமாக தற்போது இரு அணி வீரர்களும் அங்கு தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

முதல் போட்டியிலேயே அதிசயம் நடக்க வாய்ப்பிருக்கு : அஷ்வின் கணிப்பு

இந்த முதலாவது போட்டியே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வேளையில் இந்த முதலாவது ஆட்டம் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கணிப்புகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த போட்டியில் 300 ரன்கள் அடிக்க வாய்ப்புள்ளதாக சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் அவர் கூறியதாவது : நிச்சயம் இந்த சீசனில் 300 ரன்கள் என்கிற சாதனை சாத்தியமான ஒன்று. ஏனெனில் தற்போதுள்ள டி20 போட்டிகளில் 250-க்கும் மேற்பட்ட ரன்கள் அதிகமாக குவிக்கப்படுகின்றன. எனவே இந்த தொடரின் முதல் போட்டியிலேயே இந்த வாய்ப்பு இருக்கும் என்று நினைக்கிறேன்.

என்னுடைய உள்ளுணர்வு கூறும் அடிப்படையில் : நிச்சயம் 300 ரன்கள் என்கிற அதிசயம் இந்த போட்டியிலேயே நிகழ வாய்ப்புள்ளது. நான் தற்போதுள்ள ஐ.பி.எல் அணிகளின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு வரிசை ஆகியவற்றை கவனித்தேன். அதில் சில அணிகளின் பந்துவீச்சு பலம் குறைவாக உள்ளது. எனவே பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளங்களில் பலம் குறைந்த பந்துவீச்சு படை மாட்டும் பட்சத்தில் 300 ரன்கள் குவிக்க அதிக வாய்ப்புள்ளதாக அஸ்வின் கூறியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : முதல் 2 வாரங்கள் தோனி ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடமாட்டார்.. சி.எஸ்.கே நிர்வாகம் அறிவிப்பு – என்ன காரணம்?

ஐ.பி.எல் போட்டிகளை பொருத்தவரை இதுவரை எந்த ஒரு அணியுமே 300 ரன்களை குவித்தது கிடையாது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 287 ரன்கள் குவித்ததே இதுவரை ஐபிஎல் போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -