இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது கடைசி இடத்தை பிடித்து வெளியேறியிருந்தது. இதன் காரணமாக அதிகப்படியான இளம் வீரர்களை இந்த தொடரின் பிற்பாதியில் கொண்டு வந்த சென்னை அணி அடுத்த தொடருக்கு முன்னதாக தங்களது அணியை பலப்படுத்தும் நோக்கில் மும்முராக தயாராகி வருகிறது.
சி.எஸ்.கே அணியின் ரேடாரில் இருக்கும் 3 வீரர்கள் : ரவிச்சந்திரன் அஷ்வின்
இதன் காரணமாக 2026 மினி ஏலத்தில் சி.எஸ்.கே அணி சில முக்கியமான வீரர்களை ஏலத்தில் எடுக்கும் என்று தெரிகிறது. அந்த வகையில் தற்போதைய நிலவரப்படி சென்னை அணிக்கு சஞ்சு சாம்சன் வர இருப்பது உறுதியாகி உள்ளதால் சென்னை அணியில் இருந்து ரவிந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோர் ராஜஸ்தான அணிக்கு செல்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
மேலும் சில முக்கிய வீரர்களை சென்னை அணி மினி ஏலத்தின் போது தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சிஎஸ்கே அணி மினி ஏலத்தின் போது குறிப்பிட்ட மூன்று வீரர்களை ஏலத்தில் எடுக்க முனைப்பு காட்டும் என சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : அடுத்த ஆண்டிற்கான சிஎஸ்கே அணியை நிச்சயம் பலமாக்க முடியும். அந்த அணியின் துவக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் இருப்பார்கள். மேலும் சி.எஸ்.கே அணியின் ரேடாரில் வெங்கடேஷ் ஐயர் மற்றும் நிதீஷ் ராணா ஆகிய இருவருமே இடம் பெறுவார்கள் என்று நினைக்கிறன்.
ஏனெனில் சென்னை மைதானம் தற்போது மெதுவான ஆடுகளமாக மாறியதை தொடர்ந்து ஸ்கொயர் திசையில் ரன்களை அடிக்க வேண்டிய வீரர்கள் நமக்கு தேவை. அந்த வகையில் ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்கக்கூடிய வீரராக ருதுராஜ் மட்டுமே நம்மிடம் இருக்கிறார். அவரை தவிர்த்து வேறு யாரும் இல்லை. என்பதால் நிதீஷ் ராணா மற்றும் வெங்கடேஷ் ஐயரை சிஎஸ்கே அணி எதிர்பார்க்கும்.
இதையும் படிங்க : கே.கே.ஆர் அணியிலிருந்து அந்த ஒருத்தரை வெளியேற்றினாலே பல கோடிகள் கிடைத்திருக்கும் – ஆகாஷ் சோப்ரா கருத்து
அதேபோன்று ஆஸ்திரேலியா அணியில் மிடில் ஆடரின் போது மிகச் சிறப்பாக விளையாடி வரும் கேமரூன் கிரீனையும் சென்னை அணி தங்களது அணிக்குள் கொண்டு வந்து மிடில் ஆர்டரில் விளையாட வைக்க யோசிக்கலாம். இப்படி மூன்று வீரர்களை சிஎஸ்கே அணி மினி ஏலத்தின் போது தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளதாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.



