இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மினி ஏலமானது டிசம்பர் மாதம் இரண்டாம் வாரம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக இந்த நவம்பர் 15-ஆம் தேதிக்குள் ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் இருந்து விடுக்கப்படும் வீரர்களின் பட்டியலையும், தக்க வைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலையும் வெளியிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கே.கே.ஆர் அணி அவரை வெளியேற்ற வேண்டும் : ஆகாஷ் சோப்ரா
இந்நிலையில் அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக நடைபெறவிருக்கும் மினி ஏலத்திற்காக தயாராகி வரும் அனைத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து ஒரு குறிப்பிட்ட சில வீரர்களை வெளியேற்றிவிட்டு ஏலத்தில் பங்கேற்று மேலும் சில வீரர்களை வாங்க தயாராக வருகிறது.
அந்த வகையில் கடந்து 2024-ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற கொல்கத்தா அணியும் தங்களை அணியில் சில மாற்றங்களை செய்ய இருக்கிறது. இந்நிலையில் கொல்கத்தா அணியில் இருந்து ஆல்ரவுண்டரான வெங்கடேஷ் பெயரை வெளியிட்டால் அந்த அணி பெரிய தொகையுடன் மினி ஏலத்திற்கு செல்லும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட வெங்கடேஷ் ஐயர் வெளியேற்றப்பட்டால் அவர்களின் கையில் 23 கோடியே 75 லட்சம் கிடைக்கும். மேலும் கூடுதலாக ஒரு 5 கோடி வழங்கப்படும். எனவே மினி ஏலத்திற்கு செல்ல அது ஒரு நல்ல தொகையாக அவர்களுக்கு அமையும்.
அதுமட்டும் இன்றி கே.கே.ஆர் அணியில் தென்னாப்பிரிக்க அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆண்ரிச் நோர்க்கியாவும் வெளியேற்றப்பட வேண்டும். ஏனெனில் அவர் கடைசியாக எப்போது அணிக்கு விளையாடினார் என்று தெரியவில்லை. அவரும் ஒரு பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளதால் அவரையும் வெளியேற்றினால் பெரிய தொகை கொல்கத்தா அணிக்கு கிடைக்கும்.
இதையும் படிங்க : தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடுவாரா? – வெளியான தகவல்
அதே போன்று கொல்கத்தா அணியை பொருத்தவரை கேப்டனாக ரகானே நீடிப்பாரா? என்பதும் ஒரு பெரிய கேள்வி குறிதான் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தங்களது அணியின் கேப்டனுக்கான தேடலில் இருக்கும் கே.கே.ஆர் கே.எல் ராகுலை டிரேடிங் செய்து அந்த அணியின் கேப்டனாக நியமிக்கலாம் என்றும் பேசப்பட்டு வருகிறது.



