தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடுவாரா? – வெளியான தகவல்

Shreyas Iyer
- Advertisement -

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது பீல்டிங் செய்கையில் கேட்ச் பிடிக்கும் போது காயமடைந்தார். அதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது காயத்திலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறார். அதனால் அவரது உடல்நலம் குறித்த தகவல் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.

ஷ்ரேயாஸ் ஐயர் தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவாரா?

ஒருநாள் போட்டிகளின் புதிய கேப்டனாக சுப்மன் கில்லும், புதிய துணை கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயரும் நியமிக்கப்பட்ட வேளையில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்தது. அதற்கடுத்து தற்போது சொந்த மண்ணில் நடைபெறயிருக்கும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

- Advertisement -

பின்னர் இந்திய அணி அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பங்கேற்று விளையாட இருக்கிறது. இதன் காரணமாக இந்த தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பிடித்து விளையாடுவாரா? என்பதே பலரது கேள்வியாகவும் இருந்து வருகிறது.

இந்நிலையில் அவரது உடற்தகுதி குறித்து தற்போது ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது முழு உடற்தகுதியை எட்டவில்லை என்றும் அவர் இன்னும் முழு உடற்தகுதியை எட்ட குறைந்தது ஒரு மாதம் காலம் ஆகும் என்று என்று தெரிகிறது. இதன் காரணமாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை அவர் தவறவிடுவார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

மேலும் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஏற்பட்டுள்ள காயம் மெல்ல மெல்ல குணமடையும் என்பதனால் கூடுதலாக நாட்கள் எடுத்துக் கொண்டாலும் பிசிசிஐ மருத்துவக் குழு அவரை உன்னிப்பாக கவனித்துக் கொள்ளும் என்றும் முழு உடற்தகுதியை எட்டிய பின்னரே அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இந்தியா – தெ.ஆ தொடரில் ஸ்பெஷல் தங்க நாணயத்தில் டாஸ்.. அதன் சிறப்பை அறிவித்த கங்குலி

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியானது வரும் நவம்பர் 14-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறயிருக்கிறது. அதன்காரணமாக இரு அணி வீரராகளும் தற்போது தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement