டிகே’வுக்கு சாபமிட்டேன், கங்காவாக இருந்த கோலி சந்திரமுகியாக மாறுனாரு – வின்னிங் ஷாட் அடித்தது பற்றி மனம் திறக்கும் அஷ்வின்

Ashwin
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை தோற்கடித்து 2வது போட்டியில் நெதர்லாந்து எதிர்கொள்ள தயாராகி வருகிறது. அக்டோபர் 23ஆம் தேதியன்று தன்னுடைய முதல் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்தியா அந்த அணி நிர்ணயித்த 160 ரன்களை துரத்தும் போது ரோகித் சர்மா, கேஎல் ராகுல், சூரியகுமார் ஆகிய 3 முக்கிய பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டத்தால் 31/4 என ஆரம்பத்திலேயே தடுமாறி தோல்வியின் பிடியில் சிக்கியது.

Virat Kohli 1

- Advertisement -

ஆனால் அப்போது ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மூழ்கிய இந்தியாவை செங்குத்தாக தூக்கி நிறுத்திய விராட் கோலி வெற்றி பாதைக்கு அழைத்து வந்தார். இருப்பினும் கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் அவுட்டானதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் அப்போது பதற்றமடையாமல் செயல்பட்ட ரவிசந்திரன் அஸ்வின் கடைசி பந்தை கூலாக தூக்கி அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவின் சரித்திர வெற்றியை உறுதி செய்தார். அந்த அசாத்தியமான வெற்றிக்கு 6 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 82* (53) ரன்கள் குவித்த விராட் கோலி தனது கேரியரில் சிறந்த இன்னிங்சை விளையாடி இந்தியர்களை தலைநிமிர வைத்தார்.

ஆச்சர்யபடும் அஷ்வின்:
முன்னதாக அப்போட்டியில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்திய கடைசி ஓவரில் ஒய்ட் பந்தில் ஸ்டம்பிங் ஆகி தினேஷ் கார்த்திக் செய்த தவறை செய்யாத ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு ரன்னையும் ஒரு எக்ஸ்ட்ரா பந்தையும் பெற்று இறுதியில் வெற்றி பெற வைத்தது அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது. ஆனால் அந்த சமயத்தில் தினேஷ் கார்த்திக் பினிஷிங் செய்வார் என்று நினைத்ததாகவும் அவர் அவுட்டாகி பெவிலியன் வந்தபோது “படுபாவி என்னை இப்டி மாட்டிவிட்டியே” என்று அவரிடம் சொல்லிவிட்டு கடைசி பந்தை எதிர்கொள்ள சென்றதாகவும் அஸ்வின் ருசிகரமான பின்னணியை தெரிவித்துள்ளார்.

Ashwin-and-Kohli

அத்துடன் அப்போட்டியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தில் கங்காவாக இருந்த ஜோதிகாவை போல் விராட் கோலி சந்திரமுகியாக மாறி பாகிஸ்தானை பந்தாடியதாக வியப்புடன் பாராட்டும் அவர் இதுபற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “தினேஷ் கார்த்திக் அதை முடித்து விடுவார் என்று நினைத்தேன். ஆனால் அவர் அவுட்டாகி வெளியே வந்த போது “படுபாவி இப்டி பண்ணிட்டியே” என்று அவரைப் பார்த்து கூறிய நான் கிட்டத்தட்ட சாபம் விட்டேன் என்று சொல்லலாம். இருப்பினும் இன்னும் நமக்கான நேரம் இருக்கிறது என்னால் சாதிக்க முடியும் என்று அப்போது நான் நம்பினேன்”

- Advertisement -

“அந்த கடைசி பந்தில் விராட் கோலி கவர் திசைக்கு மேல் அடிக்குமாறு என்னிடம் சொன்னார். ஆனால் ரசிகர்களின் சத்தத்தால் எனக்கு எதுவுமே கேட்கவில்லை. நல்லவேளை அப்போது பவுலர் ஒயிட் வீசியதை நான் சரியாக பயன்படுத்திக் கொண்டேன். அதன்பின் கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட்டபோது இவ்வளவு போராடிய விராட் கோலிக்காகவாவது நாம் வெற்றி பெற வேண்டுமென என்னுடைய மனதில் தோன்றியது. ஏனெனில் விராட் கோலிக்கு அத்தனை ரன்களை கொடுத்த கடவுள் எனக்கும் அந்த 1 ரன்னை நிச்சயம் கொடுப்பார் என்று நினைத்துக் கொண்டே அடித்தேன். அதன்பின் என்ன நடந்தது என்பது எனக்கே புரியவில்லை. இது எனது வாழ்நாளில் விளையாடிய போட்டிகளில் மிகச்சிறந்தது என உணரும் அளவுக்கு எனக்கு தோன்றியது”

“எனக்கு முன்பாக விளையாடிய பாண்டியா மற்றும் கோலி ஆகியோர் அனுபவம் மிக்கவர்கள். அவர்கள் அமைதியாக இருந்து போட்டியை கடைசி வரை எடுத்துச் சென்றது எங்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது. ஒரு கட்டத்தில் வெற்றியை எட்ட முடியாத இடத்திலிருந்து நாங்கள் வென்றது அபாரமானது. அந்தளவுக்கு அபாரமாக பேட்டிங் செய்த விராட் கோலிக்கு நான் தலை வணங்குகிறேன்”

“அவரது பேட்டிங்கை பார்த்த போது ஏதோ ஒரு ஆவி அவரது உடம்புக்குள் புகுந்ததைப் போல் நான் உணர்ந்தேன். அவர் அடித்த ஒவ்வொரு ஷாட்களும் அபாரமாக இருந்தது. அதிலும் 45 பந்துகளை எதிர்கொண்ட பின் அவர் கங்காவிலிருந்து சந்திரமுகியாக மாறியதை நான் பார்த்தேன். என்னைப் பொறுத்தவரை அன்று அவர் இந்தியாவுக்காக தன்னுடைய மிகச்சிறந்த இன்னிங்ஸை விளையாடினார். மேலும் எங்களைப் பார்த்து ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Advertisement