சொந்த அணி வீரர்களுக்கு நீங்களே சப்போர்ட் பண்ணலனா எப்படி? கேப்டன் ரோஹித் மீது அஷ்வின் அதிருப்தி – காரணம் என்ன

Rohit-and-Ashwin
- Advertisement -

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் வென்று 2023 புத்தாண்டை வெற்றியுடன் துவக்கிய இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் ஒருநாள் தொடரையும் முதலிரண்டு போட்டியில் அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்து 2 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை வென்றுள்ளது. முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில் ராஜ்கோட் நகரில் நடைபெற்ற வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது போட்டியில் 374 ரன்களை துரத்திய இலங்கை ஆரம்பத்திலேயே முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

Shami Mankad Rohit Sharma

- Advertisement -

இருப்பினும் கடைசி நேரத்தில் கேப்டன் சனாகா வழக்கம் போல அதிரடியாக விளையாடி வெற்றிக்கு போராடினார். குறிப்பாக கடைசி ஓவரில் 98 ரன்களில் இருந்த அவர் 4வது பந்தில் எதிர்ப்புறம் இருந்து பந்தை வீசுவதற்கு முன்பாகவே வெள்ளை கோட்டை விட்டு வெளியேறியதால் முகமது ஷமி மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். அதனால் சனாக்கா ஏமாற்றமடைந்தாலும் ஐசிசி மற்றும் எம்சிசி விதிமுறைகளுக்கு உட்பட்டு அதை ஏற்றுக் கொண்ட நடுவர் தீர்ப்பை உறுதி செய்வதற்காக 3வது நடுவரை அணுகினார்.

நீங்களே இப்படி பண்ணலாமா:
ஆனால் அப்போது இந்திய கேப்டன் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடிய சனாக்காவை அவுட் செய்வதற்கு இது வழியல்ல என்று ஷமியை சமாதானப்படுத்தி அவரது வாயாலேயே அந்த அவுட்டை நடுவரிடம் வாபஸ் பெற வைத்தார். அந்த சமயத்தில் ஏற்கனவே இந்தியாவின் வெற்றி உறுதியான காரணத்தாலும் 98 ரன்னில் இருப்பவரை அந்த வகையில் அவுட்டாக்கி சதமடிக்க விடாமல் தடுப்பது தவறானது என்ற நோக்கத்துடன் ரோகித் சர்மா செய்த அந்த செயல் இந்திய மற்றும் இலங்கை ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றது.

IND vs SL Shanaka

இந்நிலையில் விதிமுறைக்குட்பட்டு தனது அணி வீரர் செய்த ரன் அவுட்டுக்கு ஆதரவு கொடுக்காமல் கேப்டனே வாபஸ் பெற்றது தமக்கு ஏமாற்றத்தை கொடுப்பதாக மன்கட் அவுட்டை லண்டனின் எம்சிசி அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்த தமிழக வீரர் அஷ்வின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக பவுலர் செய்த அவுட்டை நடுவர் தீர்மானிக்க வேண்டுமே தவிர நீங்கள் எப்படி தீர்மானிக்க முடியும்? என்று கேப்டன் ரோகித் சர்மா மீது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஷனாகா 98 ரன்களில் இருந்த போது ஷமி எதிர்ப்புறமிருந்து ரன் அவுட் செய்து நடுவரிடம் அவுட் கேட்டார். ஆனால் ரோகித் அதை வாபஸ் பெற்று விட்டார். இந்த இடத்தில் அந்த தருணத்தில் இருந்த போட்டியின் சூழ்நிலை முக்கியமற்றது என்பதுடன் அது ஒரு அங்கீகரிக்கப்பட்ட அவுட்டாகும் என்பதை மட்டும் நான் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் நண்பர்களே. மேலும் பேட்ஸ்மேன்கள் எல்பிடபிள்யு அல்லது கேட்ச் முறையில் அவுட்டாகும் போது யாருமே அந்த அணியின் கேப்டன் நடிகர் சரத்குமார் அல்லது அமிதாப்பச்சன் போல சத்தமாக அவுட் கேட்கிறாரா என்று எதிர்பார்ப்பதில்லை”

Ashwin

“ஏனெனில் அந்த சமயங்களில் பவுலர்கள் கேட்டால் அவுட்டாக இருக்கும் பட்சத்தில் நடுவர் அவுட் கொடுத்து விடுவார் அவ்வளவு தான் கதை முடிந்தது. சொல்லப்போனால் களத்தில் இருக்கும் ஒரு ஃபீல்டர் அவுட் கேட்டாலும் அதில் நியாயம் இருந்தால் அவுட் கொடுக்க வேண்டியது நடுவரின் கடமையாகும். இருப்பினும் இந்த வகையான அவுட்டில் மட்டும் தொடர்ந்து விவாதங்கள் நடைபெறுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மேலும் அந்த அவுட்டை பவுலர் முழுமையாக செய்யும் போது அதை நடுவரிடம் கேட்பதற்கான முழு உரிமையும் அவரிடம் இருக்கும் அல்லவா? பல போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் எட்ஜ் கொடுத்தால் நடுவர் அவுட் கொடுப்பதற்கு முன்பாகவே நடையை கட்டி விடுவார்கள்”

இதையும் படிங்க: IND vs SL : 3 ஆவது ஒருநாள் போட்டியில் எதிர்பார்த்தது போலவே 2 மாற்றத்தை செய்த ரோஹித் – தமிழக வீரருக்கு வாய்ப்பு

“அந்த சமயங்களில் பந்து வீச்சு அணியின் கேப்டன் பேட்ஸ்மேனிடம் போய் “நடுவர் அவுட் கொடுக்கவில்லை அதனால் நீங்கள் மீண்டும் பேட்டிங் செய்யுங்கள் என்று கேட்ப்பாரா? யாரை கேட்டு நீங்கள் வெளியேறுகிறீர்கள்? உங்களது அணியின் நலனை மறம்காமல் தொடர்ந்து பேட்டிங் செய்யுங்கள் என்று சொல்வாரா” எனவே இந்த விளையாட்டில் காலம் காலமாக பேட்ஸ்மேனுக்கு ஒரு நியாயமும் பவுலருக்கு ஒரு நியாயமும் இருந்து வருகிறது” என்று கூறினார்.

Advertisement