- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணியில் அவரைப் பாத்து பொறாமைப்பட்டு.. அவர் மாதிரி வர ஆசைப்படுறேன்.. அஸ்வின் பேட்டி

சென்னையில் வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரவிச்சந்திரன் அஸ்வின் 113, ஜடேஜா 86, ஜெய்ஸ்வால் 56 ரன்களை எடுத்த உதவியுடன் 376 ரன்கள் குவித்தது. வங்கதேசத்திற்கு அதிகபட்சமாக ஹசன் மஹ்முத் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

அதன் பின் களமிறங்கிய வங்கதேசம் மோசமாக விளையாடி வெறும் 149 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக சாகிப் அல் ஹசன் 32 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து 227 ரன்கள் முன்னிலையுடன் விளையாடும் இந்தியா 2வது நாள் முடிவில் 81-3 ரன்கள் எடுத்து மொத்தம் 308 ரன்களை முன்னிலையாகப் பெற்று வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.

- Advertisement -

அஸ்வினுக்கே பொறாமை:

முன்னதாக இப்போட்டியின் முதல் இன்னிங்சில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 144-6 என தடுமாறிய இந்திய அணியை அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் 199 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துக் காப்பாற்றினார்கள். அப்போது ஜடேஜா தம்மை சிறப்பாக வழி நடத்தி சதமடிக்க உதவியதாக அஸ்வின் முதல் நாள் முடிவில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜாவை பார்த்து பொறாமைப்பட்டு அவரைப்போல் இருக்க விரும்புவதாக அஸ்வின் கூறியுள்ளார். இது பற்றி 2வது நாள் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் ஒன்றாக விளையாடுவது போன்றவற்றை திட்டமிடுவதில்லை. ஜடேஜா அழகாக பரிணமித்த ஒரு கிரிக்கெட்டர். நான் எப்போதும் அவரை பொறாமைப்படுகிறேன். அதை ஏற்கனவே தெளிவாக சொல்லியிருக்கிறேன்”

- Advertisement -

ஜடேஜா மாதிரி:

“ஜடேஜா அவ்வளவு திறமைசாலி. அவர் தனது திறனை அதிகரிக்க வழிகளை பிடித்து மிகவும் எளிமையாக வைத்திருக்கிறார். அதை தினமும் அவர் செய்கிறார். எனவே அவராக நான் இருக்க விரும்புகிறேன். ஆனால் நான் நானாக இருப்பதிலேயே மகிழ்ச்சியடைகிறேன். அவர் ஒரு சிறந்த கிரிக்கெட்டர். அவருக்காக மகிழ்ச்சியடைகிறேன்”

இதையும் படிங்க: அது இந்தியாவுக்கு சாதகமா இருக்கு.. அந்த பந்தை கொடுத்தா இப்போ கூட ஜெய்ப்போம்.. தஸ்கின் அஹ்மத் பேட்டி

“பல வழிகளைப் போலவே கடந்த சில வருடங்களாக ஜடேஜா பேட்டிங் செய்வதைப் பார்த்து நான் எவ்வளவு சிறப்பாக இருக்க முடியும் என்பதைப் பற்றிய நுண்ணறிவை எனக்கு அளித்துள்ளது. நாங்கள் இருவரும் ஒன்றாக வளர்ந்தோம். ஒன்றாக சிறப்பான விஷயங்களை செய்து வருகிறோம். இந்தக் கட்டத்தில் நாங்கள் உண்மையில் ஒருவரை ஒருவர் மதிக்கிறோம். முன்பை விட இருவரும் ஒருவருக்கொருவர் வெற்றியை அனுபவித்து வருகிறோம்” என்று கூறினார்.

- Advertisement -