ஐபிஎல் இருந்தாலும் இப்போவும் நமக்கு அந்த சாதகம் இருக்கு – இந்தியாவின் 2023 உ.கோ கனவு பற்றி அஷ்வின்

Ashwin
- Advertisement -

2023 அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரை வென்ற இந்தியா அடுத்ததாக நியூஸிலாந்துக்கு எதிராக விளையாடி வருகிறது. கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் ட்ராபியை எம்எஸ் தோனி தலைமையில் வென்ற இந்தியா அதன் பின் அவரது தலைமையிலும் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரின் தலைமையிலும் பங்கேற்ற அனைத்து உலக கோப்பைகளிலும் லீக் சுற்றில் அசத்தினாலும் நாக் அவுட் சுற்றில் சொதப்பி வெறும் கையுடன் வெளியேறியது.

IND

- Advertisement -

அதனால் சந்தித்துள்ள கடுமையான விமர்சனங்களுக்கு இம்முறை எப்படியாவது கோப்பையை வென்று முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய கிரிக்கெட் அணி உள்ளது. சொல்லப்போனால் கடைசியாக கடந்த 2011ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பையை 28 வருடங்கள் கழித்து வென்ற இந்தியா இம்முறை சொந்த மண் சாதகத்தை பயன்படுத்தி மீண்டும் கோப்பையை வெல்வதற்கு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் அந்த வாய்ப்பும் சாதகமும் ஐபிஎல் தொடரால் கிட்டத்தட்ட பறிபோய் விட்டது என்று சொல்லலாம்.

இப்போவும் சாதகமுண்டு:
ஏனெனில் இப்போதெல்லாம் உலகின் அனைத்து முன்னணி நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் ஐபிஎல் தொடரில் விளையாடி இந்திய ஆடுகளங்கள் மற்றும் கால சூழ்நிலைகளை புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் விளையாட கற்றுக் கொண்டுள்ளனர். அது போக ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்களுடன் விளையாடும் வெளிநாட்டு வீரர்கள் அவர்களது பலம் பலவீனங்களை புரிந்து கொண்டு தங்களது நாட்டுக்காக இந்திய மண்ணில் விளையாடும் போது அதை பயன்படுத்தி இந்திய அணியை அடித்து நொறுக்குகிறார்கள்.

ROhit Sharma MI vs KKR

மொத்தத்தில் 2011க்குப்பின் ஐபிஎல் தொடரால் இந்திய கால சூழ்நிலைகளை வெளிநாட்டு அணிகள் நன்கு தெரிந்து கொண்டதால் இம்முறை நடைபெறும் உலகக் கோப்பையை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற ஆசிய நாடுகள் வெல்ல முடியாது என்று சமீபத்தில் இலங்கை ஜாம்பவான் குமார் சங்ககாரா தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஐபிஎல் மற்றும் இருதரப்பு தொடர்களில் விளையாடும் போது குறிப்பிட்ட மைதானங்களில் மட்டுமே வெளிநாட்டு அணிகள் விளையாடியுள்ளதாக தெரிவிக்கும் அஷ்வின் இந்திய அணி மட்டுமே நாடு முழுவதிலுமுள்ள அனைத்து மைதானங்களிலும் விளையாடிய அனுபவம் கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

- Advertisement -

எனவே இப்போதும் இந்தியாவுக்கு சொந்த மண் சாதகம் உள்ளது என்று தெரிவிக்கும் அவர் 2023 உலகக்கோப்பை வெற்றி வாய்ப்பு பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “2019 உலகக் கோப்பைக்கு பின் இந்தியா சொந்த மண்ணில் தொடர் வெற்றிகளை பெற்று அற்புதமான சாதனை படைத்துள்ளது. குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை என சொந்த மண்ணில் களமிறங்கிய அனைத்து அணிகளுக்கு எதிராகவும் இந்தியா வென்றுள்ளது. 2019 உலக கோப்பைக்கு பின் சொந்த மண்ணில் 14 – 4 வெற்றிகளை பதிவு செய்துள்ள இந்தியாவின் வெற்றி சராசரி 78 – 80% ஆகும்”

Ashwin

“இந்த 18 போட்டிகளும் 14 வெவ்வேறு மைதானங்களில் நடைபெற்றன. ஆனால் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் ஒப்பிடும் போது அவர்கள் டெஸ்ட் போட்டிகளை நான்கைந்து கிரிக்கெட் மைதானங்களிலும் ஒருநாள் போட்டிகளை 2 – 3 மைதானங்களில் மட்டுமே விளையாடுகிறார்கள். மேலும் 2011 உலகக் கோப்பைக்கு பின் அனைத்து அணிகளும் சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்றுள்ளன. முதலில் இந்தியா 2015இல் ஆஸ்திரேலியா, 2019இல் இங்கிலாந்து வென்றன. எனவே வெற்றிக்கு சொந்தமான சூழ்நிலைகளை புரிந்து கொள்வதை விட இதில் வேறு எந்த ராக்கெட் அறிவியல் ரகசியமும் இல்லை”

- Advertisement -

“இருப்பினும் இந்தியாவைப் பொறுத்த வரை நாம் விளையாடும் மைதானங்களில் எண்ணிக்கை காரணமாக ஒரு சிறிய மாற்றமாக இருக்கும். ஏனெனில் வெவ்வேறு மைதானங்களில் விளையாடும் போது வெவ்வேறு வகையான பிட்ச் இருக்கும். மேலும் இந்தியாவிடம் ஒரு நிலையான டெஸ்ட், ஒருநாள், டி20 சீசன் இல்லை என்பதால் எஃப்டிபி எப்படி இருக்கும் என்பது தெரியாது”

இதையும் படிங்க: வீடியோ : டாஸ் வென்று என்ன செய்வது என்பதை மறந்து ஸ்கூல் பையன் போல உளறிய ரோஹித் சர்மா – மைதானத்தில் ஏற்பட்ட சிரிப்பலை

“அது நமது அணி அல்லது வீரரின் பார்வையில் கடினமாகிறது. மேலும் சமீப காலங்களில் டெஸ்ட் போட்டிகளில் சென்னை, மும்பை புனே மற்றும் லக்னோ ஆகிய மைதானங்களில் மட்டுமே இந்தியா தோற்றுள்ளது. அப்போட்டிகளில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து சராசரிக்கும் குறைவான ஸ்கோர் எடுத்ததே தோல்விக்கு காரணமாகும்” என்று கூறினார்.

Advertisement