- Advertisement -
டிஎன்பிஎல்

இந்த வயசுலயும் வாய்ப்பு கிடைக்கனும்ன்னா.. அதை செய்யனும்ன்னு புரிஞ்சுகிட்டேன்.. திண்டுக்கல் கேப்டன் அஸ்வின் பேட்டி

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. அதில் லீக் மற்றும் பிளே ஆஃப் சுற்றில் வெற்றி கண்ட நடப்புச் சாம்பியன் கோவை கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. குறிப்பாக ஷாருக்கான் தலைமையிலான கோவை அனுபவமிக்க அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணியை ஃபைனலில் சந்திக்கிறது.

முன்னதாக இந்தத் தொடரில் திண்டுக்கல் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ரவிச்சந்திரன் அஸ்வின் தம்முடைய அனுபவத்தால் அசத்தி வருகிறார். இந்தியாவுக்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடி நிறைய வெற்றிகளில் பங்காற்றிய அவர் இத்தொடரில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக அழுத்தமான எலிமினேட்டர் போட்டியில் 57 ரன்கள் அடித்த அவர் திண்டுக்கல்லை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருது வென்றார்.

- Advertisement -

முன்னேற்றம் தேவை:
அதை விட குவாலிபயர் 2 போட்டியில் 11 பவுண்டரி 3 சிக்சர்களை பறக்க விட்ட அஸ்வின் 69* (30) ரன்கள் விளாசி திண்டுக்கல்லை ஃபைனல் அழைத்து வந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்த ஜாம்பவான் ஸ்பின்னராக போற்றப்படும் அவர் இப்படி 37 வயதில் பேட்டிங்கில் அசத்துவது ரசிகர்களிடம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் என்ன தான் அனுபவத்தைக் கொண்டிருந்தாலும் நாம் முன்னேற வேண்டியது அவசியம் என்று 2024 ஐபிஎல் தொடரில் உணர்ந்ததாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். குறிப்பாக 37 வயதிலும் அணியில் தமக்கான வாய்ப்பை பெறுவதற்கு பேட்டிங்கில் முன்னேறுவது அவசியம் என்பதை உணர்ந்ததாக அஸ்வின் கூறியுள்ளார். இது பற்றி ஃபைனலுக்கு முன் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அனைத்தும் செயல்முறையில் இருக்கிறது அல்லவா? ஷாருக்கானிடம் பவர் ஃஹிட்டிங் செய்வது எப்படி என்று கேட்டுப் பாருங்கள். எப்படி உங்களால் ஆஃப் சைட் மற்றும் லெக் சைட் திசையில் பந்தை அடிக்க முடிகிறது? என்று கேட்டுப் பாருங்கள். அவை அனைத்தும் கோணங்கள் மற்றும் தூண்டுதல்களை புரிந்து கொள்வதை பற்றியதாகும். கடந்த ஐபிஎல் தொடரின் போது என்னுடைய ஆட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பதை நான் உணர்ந்தேன்”

இதையும் படிங்க: இவ்ளோ பெரிய பிளேயரா இருந்து அஷ்வின் டி.என்.பி.எல் தொடர்ல ஆட என்ன காரணம் தெரியுமா? – விவரம் இதோ

“குறிப்பாக ஸ்கொயர் ஆஃப் தி விக்கெட் திசையில் என்னுடைய பேட்டிங்கை முன்னேற்ற வேண்டும் என்று உணர்ந்தேன். ஏனெனில் என்னால் மைதானத்தின் நேராக சிறப்பாக அடிக்க முடியும் என்பது எனக்குத் தெரியும். அதனால் மற்ற ஆப்சன்களை பயன்படுத்த விரும்பினேன். எனவே எனக்கு நானே கேள்வி கேட்டு பதிலை கண்டுபிடிக்க முடிந்தால் இந்த விளையாட்டில் என்னை ஆர்வமாக ஈடுபடுத்திக் கொள்ள முடியும்” என்று கூறினார்.

- Advertisement -