என்னா மனுஷன்யா.. ராகுல் ட்ராவிட்டிடம் கோப்பையை வாங்கி 2024 டி20 உ.கோ.. அஸ்வின் செய்த நெகிழ்ச்சியான செயல்

TNPL Ashwin
- Advertisement -

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. குறிப்பாக இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் கோவையை 6 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் தோற்கடித்தது. இந்த சீசனில் அழுத்தமான எலிமினேட்டர் போட்டியில் அரை சதமடித்த அஸ்வின் திண்டுக்கல்லை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

அதே போல குவாலிபயர் 2 போட்டியிலும் அதிரடியாக விளையாடிய அவர் அரை சதமடித்தார். அதே வேகத்தில் இறுதிப் போட்டியிலும் அரை சதமடித்த அவர் ஆட்டநாயகன் விருது வென்றார். அப்படி நாக் அவுட் சுற்றில் ஹாட்ரிக் அரை சதங்களை அடித்து அசத்திய அஸ்வின் தலைமையில் முதல் முறையாக திண்டுக்கல் டிஎன்பிஎல் கோப்பையை வென்று வரலாறு படைத்தது.

- Advertisement -

நெகிழ்ச்சியான செயல்:
முன்னதாக சென்னையின் சேப்பாக்கத்தில் ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெற்ற டிஎன்பிஎல் இறுதிப்போட்டியில் ஜாம்பவான் ராகுல் டிராவிட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அத்துடன் போட்டி முடிந்ததும் வெற்றிக் கோப்பையை ராகுல் டிராவிட் பரிசாக கொடுத்தார். அதைப் பெற்ற அஸ்வின் “நீங்கள் 2024 டி20 உலகக் கோப்பையை கொண்டாடியதைப் போல நானும் கொண்டாடுகிறேன் பாருங்கள்” என்று ட்ராவிட்டுக்கு முன்பாக சில நொடிகள் கொண்டாடினார்.

அதாவது ஒரு வீரராக ராகுல் டிராவிட் உலகக் கோப்பையை வென்றது கிடையாது. இருப்பினும் 2024 டி20 உலகக் கோப்பையை அவர் பயிற்சியாளராக இந்தியா வெல்ல முக்கிய பங்காற்றினார். அப்போது கோப்பையை விராட் கோலி கொண்டு வந்து கொடுத்தார். அதை கையில் வாங்கிய ராகுல் டிராவிட் கோப்பையை மேலே உயர்த்தி தனது 28 வருட கேரியரில் அடக்கி வைத்திருந்த அனைத்து சாதனை வெறியையும் வெறித்தனமாக கத்தி கொண்டாடியது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

- Advertisement -

அதே போல 2024 டிஎன்பிஎல் தொடரில் வென்றதும் டிராவிட் முன்பாக சில நொடிகள் கொண்டாடிய ரவிச்சந்திரன் அஸ்வின் அடுத்த நொடியே கோப்பையை இளம் வீரர்களின் கையில் கொடுத்து விட்டார். அத்துடன் திண்டுக்கல் அணியின் பேருந்து ஓட்டுனரையும் அந்த வெற்றி கொண்டாட்டத்திற்கு அஸ்வின் வரச் சொல்லியிருந்தார். அதனால் இளம் வீரர்கள் கொண்டாடி முடித்த சில நொடிகளில் கோப்பையை திண்டுக்கல் அணி பேருந்து ஓட்டுனரிடம் அஸ்வின் கொடுக்க சொன்னார்.

இதையும் படிங்க: இந்தியாவின் வரலாறே மாறிப்போச்சு.. ரோஹித் சர்மா ரொம்ப நல்லவரா இல்லாம இதை செஞ்சுருக்கலாம்.. சல்மான் பட்

அதை வாங்கிய அந்த ஓட்டுநர் திண்டுக்கல் அணியுடன் சேர்ந்து கோப்பையை கையிலேந்தி வெற்றியை கொண்டாடினார். அந்த வகையில் ஓட்டுநர் என்ற பாரபட்சம் பார்க்காமல் கோப்பையை கையில் கொடுத்து அழகு பார்த்த ரவிச்சந்திரன் அஸ்வினின் “என்னா மனுஷன்யா” என்ற சொல்லுக்கு எடுத்துக்காட்டாக நடந்து கொண்டார். இதைத்தொடர்ந்து அடுத்த மாதம் வங்கதே டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்காக அஸ்வின் விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement