- Advertisement -
இந்திய கிரிக்கெட்

38 வயதில் உலக சாதனை.. ஹேட்லி, வால்ஷ் வாழ்நாள் சாதனைகளை உடைத்த அஸ்வின்.. வார்னேவின் சாதனை சமன்

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதனால் வங்கதேசத்துக்கு எதிராக ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. அத்துடன் பாகிஸ்தானை போல வீழ்த்துவோம் என்று சவால் விடுத்த வங்கதேசத்தை தோற்கடித்த இந்தியா 1 – 0* (2) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த வெற்றிக்கு ஆல் ரவுண்டராக முக்கிய பங்காற்றிய ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டநாயக்கன் விருதை வென்றார். குறிப்பாக தம்முடைய சொந்த ஊரான சென்னையில் முதல் இன்னிங்சில் இந்தியா 144-6 என தடுமாறிய போது ஜடேஜாவுடன் சேர்த்து அபாரமாக பேட்டிங் செய்த அவர் சதமடித்து 113 ரன்கள் குவித்தார். அத்துடன் 2வது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை எடுத்த அவர் வங்கதேசத்தை 234 ரன்களுக்கு சுருட்டி வெற்றி பெற உதவினர்.

- Advertisement -

38 வயதில் உலக சாதனை:

அப்படி இந்தப் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 38 வயதில் சதமடித்து ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை எடுத்தார். இதன் வாயிலாக 147 வருட டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் “அதிக வயதில் ஒரே போட்டியில் சதமும் 5 விக்கெட்டுகளும் எடுத்த வீரர்” என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். அவரை தவிர்த்து வேறு யாரும் 38 வயதில் ஒரே போட்டியில் சதமும் 5 விக்கெட்டுகளும் எடுத்ததில்லை.

இது போக கடந்த 2021ஆம் ஆண்டு இதே சென்னை மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக அஸ்வின் சதமும் 5 விக்கெட்டுகளும் எடுத்திருந்தார். இதன் வாயிலாக “டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் 2 முறை ஒரே போட்டியில் சதமும் 5 விக்கெட்டுகளும் எடுத்த முதல் வீரர்” என்ற உலக சாதனையை அஸ்வின் படைத்துள்ளார்.

- Advertisement -

ஜாம்பவான்களை முந்திய அஸ்வின்:

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூஸிலாந்து ஜாம்பவான் ரிச்சர்ட் ஹாட்லியை முந்திய அஸ்வின் அதிக முறை ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை எடுத்த 2வது வீரர் என்ற ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்னேவின் வாழ்நாள் சாதனையையும் சமன் செய்துள்ளார். அந்த பட்டியல்:
1. முத்தையா முரளிதரன்: 67
2. ரவிச்சந்திரன் அஸ்வின்/ஷேன் வார்னே: தலா 37
3. ரிச்சர்ட் ஹாட்லி: 36
4. அனில் கும்ப்ளே: 35
5. ரங்கனா ஹெராத்: 34

இதையும் படிங்க: இந்திய அணிக்கெதிராக நாங்க தோற்று இருந்தாலும் இந்த விஷயத்தை நினைச்சா பெருமையா இருக்கு – வங்கதேச கேப்டன் பேட்டி

அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த 8வது வீரர் என்ற வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கோர்ட்னி வால்ஷ் சாதனையை உடைத்து அஸ்வின் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் வால்ஷ் 132 போட்டிகளில் 519 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். தற்போது 101 போட்டிகளில் 522* விக்கெட்டுகளை எடுத்து அஸ்வின் அவரை முந்தியுள்ளார்.

- Advertisement -