IND vs WI : டெஸ்ட் கிரிக்கெட்டில் வி.வி.எஸ் லட்சுமணனின் சாதனையை முறியடித்த – தமிழக வீரர் அஷ்வின்

Laxman-and-Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது ஜூலை 20-ஆம் தேதி டிரினிடாட் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 438 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

Kohli

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக விராட் கோலி 121 ரன்களையும், ரோஹித் சர்மா 80 ரன்களையும் குவித்து அசத்தினர். அதேவேளையில் பின்வரிசையில் எட்டாவது வீரராக களமிறங்கிய தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 78 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் குவித்து கடைசி விக்கெட்டாக ஆட்டம் இழந்தார்.

இதன் மூலம் அவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவானான விவிஎஸ் லட்சுமணனின் பேட்டிங் சாதனை ஒன்றினை பின்னுக்கு தள்ளி பேட்டிங்கில் ஒரு சாதனை படைத்துள்ளார். அந்த வகையில் அவர் படைத்த சாதனை யாதெனில் : இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆறாவது இடத்தில் அல்லது அதற்கு கீழ் உள்ள இடங்களில் இறங்கி அதிக டெஸ்ட் ரன்களை குவித்த வீரர் என்ற பட்டியலில் வி.வி.எஸ் லக்ஷ்மணன் 3108 ரன்களுடன் மூன்றாம் இடத்தில் இருந்தார்.

Ashwin

இந்நிலையில் அஸ்வின் இந்த போட்டியில் அடித்த 56 ரன்கள் மூலம் 3-ஆம் இடத்தில் இருந்த விவிஎஸ் லட்சுமணனை பின்னுக்கு தள்ளி தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் 3112 ரன்களுடன் மூன்றாம் இடத்தினை பிடித்துள்ளார். இந்திய அணிக்காக ஆறாவது மற்றும் அதற்கு கீழ் உள்ள இடங்களில் களமிறங்கி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவராக இந்த பட்டியலில் கபில் தேவ் 5116 ரன்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.

- Advertisement -

அவருக்கு அடுத்து எம்.எஸ் தோனி 4717 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும், ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது 3112 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும், அதை தொடர்ந்து லட்சுமணன் 3108 ரன்கள் உடன் நான்காவது இடத்திலும், ரவீந்திர ஜடேஜா 2696 ரன்களுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Ashes 2023 : உள்ளே புகுந்து ட்விஸ்ட் கொடுத்த மழை, லபுஸ்ஷேன் அசத்தலில் போராடும் ஆஸி – பறிபோக தயாரான இங்கிலாந்தின் வெற்றி

இந்த டெஸ்ட் போட்டியில் விராட் கோலி அடித்த 29-வது டெஸ்ட் சதம் குறித்தே பலரும் பேசி வரும் வேளையில் சத்தமில்லாமல் அஸ்வின் லட்சுமணனின் சாதனையை முறியடித்துள்ள இந்த விடயம் தற்போது அனைவரும் மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement