- Advertisement -
இந்திய கிரிக்கெட்

96 விக்கெட்ஸ்.. அனில் கும்ப்ளேவின் தனித்துவமான சாதனையை உடைத்த அஸ்வின்.. வால்ஷை முந்த வாய்ப்பு

சென்னையில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அஸ்வின் 113, ஜடேஜா 86, ஜெய்ஸ்வால் 56 ரன்கள் எடுத்த உதவியுடன் 376 ரன்கள் குவித்தது. அதன் பின் களமிறங்கிய வங்கதேசம் சுமாராக விளையாடி 149 ரன்களுக்கு சுருண்டது.

அதன் பின் ஃபாலோ ஆன் கொடுக்காமல் விளையாடிய இந்தியா 2வது இன்னிங்ஸில் 287-4 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக ரிஷப் பண்ட் சதமடித்து 109, சுப்மன் கில் 119* ரன்கள் குவித்தனர். இறுதியில் 515 ரன்களை துரத்தும் வங்கதேசம் 3வது நாள் முடிவில் 158-4 ரன்கள் எடுத்து இந்தியாவை விட இன்னும் 357 ரன்கள் பின்தங்கியுள்ளது.

- Advertisement -

அனில் கும்ப்ளேவை முந்திய அஸ்வின்:

முன்னதாக இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 144-6 என இந்தியா தடுமாறிய போது ஜடேஜாவுடன் சேர்ந்து அபாரமாக பேட்டிங் செய்த அஸ்வின் தனது சொந்த ஊரில் சதமடித்து கை கொடுத்தார். அதனால் சில சாதனைகளையும் படைத்த அவர் பந்து வீச்சில் விக்கெட்டுகளை எடுக்கவில்லை. இருப்பினும் 2வது இன்னிங்ஸில் இதுவரை அஸ்வின் 3* விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

அதையும் சேர்த்து டெஸ்ட் போட்டிகளில் 4வது இன்னிங்ஸில் அஸ்வின் 96 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அதாவது இதுவரை விளையாடிய 101 டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் 35 முறை 4வது இன்னிங்ஸில் விளையாடியுள்ளார். அந்த 35 நான்காது இன்னிங்ஸில் அவர் 96 விக்கெட்டுகளை 19.4 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.

- Advertisement -

வால்ஷை முந்த வாய்ப்பு:

இதன் வாயிலாக டெஸ்ட் போட்டிகளில் 4வது இன்னிங்ஸில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற ஜாம்பவான் அனில் கும்ப்ளேவின் தனித்துவமான சாதனையும் அஸ்வின் உடைத்துள்ளார். இதற்கு முன் அனில் கும்ப்ளே தம்முடைய கேரியரில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளின் 4வது இன்னிங்ஸில் 94 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: தோனி மட்டுமல்ல.. கில்கிறிஸ்டையும் முந்தி ரிஷப் இந்த உலக சாதனை படைப்பாரு.. தமீம் இக்பால் உறுதி

இது போக தம்முடைய டெஸ்ட் கேரியரில் மொத்தமாக அஸ்வின் இதுவரை 519* விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்த 8வது வீரர் என்ற வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கோர்ட்னி வால்ஷ் சாதனையை அஸ்வின் சமன் செய்துள்ளார். எனவே இப்போட்டியில் மேற்கொண்டு 1 விக்கெட் எடுக்கும் பட்சத்தில் அவரை முந்தி அஸ்வின் மற்றுமொரு சாதனை படைப்பதற்கான 99% பிரகாச வாய்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -