அசிங்கமா நடந்துக்காதீங்க.. தோனி தலைமையில் இது நடக்கலையா? பாண்டியாவை விமர்சிக்கும் ரசிகர்கள் பற்றி அஸ்வின்

R Ashwin and MI
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாடி வரும் மும்பை இந்தியன்ஸ் இதுவரை களமிறங்கிய 2 போட்டிகளிலும் 2 தோல்விகளை சந்தித்துள்ளது. முன்னதாக 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மாவை வருங்காலத்தை கருத்தில் கொண்டு இந்த வருடம் கழற்றி விட்ட மும்பை ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக அறிவித்தது.

அப்போதிலிருந்தே ஏராளமான ரசிகர்கள் பாண்டியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக அகமதாபாத் மைதானத்தில் பாண்டியாவுக்கு எதிராக கூச்சலிட்ட மும்பை ரசிகர்கள் குஜராத்தின் வெற்றியை கொண்டாடினர். அத்துடன் ரோகித் சர்மாவை பவுண்டரி எல்லைக்கு சென்று ஃபீல்டிங் செய்யுமாறு சொன்னதால் பாண்டியாவை தற்போது உச்சகட்டமாக ரசிகர்கள் திட்டி தீர்க்கின்றனர்.

- Advertisement -

அஸ்வின் அதிருப்தி:
இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவை இப்படி ரசிகர்கள் திட்டி தீர்ப்பது பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “பொறுப்பு ரசிகர்களிடமும் உள்ளது என்று நினைக்கிறேன். இதை நீங்கள் மற்ற நாடுகளில் பார்த்திருக்கிறீர்களா? ஜோ ரூட் மற்றும் ஜாக் கிராவ்லி, ஜோஸ் பட்லர் ரசிகர்கள் சண்டை போட்டு பார்த்திருக்கிறீர்களா? அல்லது ஸ்டீவ் ஸ்மித், பட் கமின்ஸ் ரசிகர்கள் ஆஸ்திரேலியாவில் சண்டையிட்டு பார்த்திருக்கிறீர்களா? இதை நான் பலமுறை கூறியுள்ளேன்”

“கிரிக்கெட்டில் சினிமா கலாச்சாரம் இருக்கிறது. கிரிக்கெட் பிராண்டிங் மார்க்கெட்டிங் போன்ற அம்சங்கள் இருப்பதை நான் அறிவேன். அதை மறுக்கவில்லை. அதற்காக ரசிகர்களின் போர்கள் அந்த பாதையில் அசிங்கமாக செல்லக்கூடாது. இந்த வீரர்கள் நம் நாட்டுக்காக விளையாடுகிறார்கள் என்பதை ரசிகர்கள் நினைவில் கொள்ள வேண்டும்”

- Advertisement -

“அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு கிரிக்கெட்டர் இப்படி எதிர்ப்புகளை சந்திப்பதற்கான உத்தரவாதம் என்ன? இதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. உங்களுக்கு ஒரு வீரரை பிடிக்கவில்லை என்றால் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள். அதற்காக ஏன் அணி நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டுமா? இதற்கு முன் இப்படி நடந்ததில்லை என்பது போல் நாம் தற்போது நடிக்கிறோம். ஏனெனில் சச்சின் தலைமையில் கங்குலி விளையாடியுள்ளார். அவர்கள் இருவரும் டிராவிட் தலைமையில் விளையாடியுள்ளனர்”

“அந்த மூவரும் கும்ப்ளே தலைமையில் விளையாடியுள்ளனர். அந்த அனைவருமே தோனி தலைமையிலும் விளையாடியுள்ளனர். தோனி தலைமையில் அந்த ஜாம்பவான்கள் விளையாடினர். விராட் கோலி தலைமையில் தோனி விளையாடினர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இப்போது மட்டும் என்ன பிரச்சனை? பொதுவாக நாம் வீட்டில் அமர்ந்து கொண்டு வெளியே இருக்கும் குப்பையை யாராவது அள்ளுவார்களா என்று பார்ப்போம். நாம் அதை செய்ய விரும்புவதில்லை”

இதையும் படிங்க: “ஃபேர்பிளே மட்டுமல்ல ஆஸ்கார் விருதே குடுக்கலாம்” கம்பீர் கோலி ஹக் குறித்து – சுனில் கவாஸ்கர் கருத்து

“எனவே முதலில் நம்மை திருத்திக் கொள்ள வேண்டும். உண்மையான விளையாட்டில் உண்மையான உணர்வுகள் இருக்கும். எனவே உண்மையான கிரிக்கெட்டை எப்போதும் சினிமாவுடன் ஒப்பிட முடியாது. சிலரை ஹீரோவாக கொண்டாடுவது சிறப்பானது. ஆனால் அதற்காக மற்றொரு வீரரை இழிவுபடுத்தக் கூடாது. இது நான் நம் பூமியின் முகத்திலிருந்து மறைந்து போக விரும்பும் ஒன்றாகும் ” என்று கூறினார்.

Advertisement