பயிற்சியாளர் நேர்காணலில் ரவி சாஸ்திரி கூறிய இந்த வார்த்தைகளே மீண்டும் அவரை பயிற்சியாளராக மாற்றியது – வெளியான ரகசியம்

Ravi
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை வரை ரவி சாஸ்திரி இந்திய அணி பயிற்சியாளராக செயல்பட உள்ளார்.

Ravi

- Advertisement -

முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ், முன்னாள் இந்திய வீரர் அனுஷ்மான் கேக்வாட், முன்னாள் பெண்கள் அணி கேப்டன் ஷாந்தா ரங்கசாமி ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழு ரவி சாஸ்திரியை தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்ய பி.சி.சி.ஐ க்கு பரிந்துரை செய்தது அதன்படி ரவி சாஸ்திரி புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் இந்த நேர்காணலில் ரவிசாஸ்திரி பகிர்ந்துகொண்ட கருத்துகள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் ரவி சாஸ்திரி குறிப்பிட்டதாவது : உலக கோப்பை தொடர் தோல்வி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ரவிசாஸ்திரி கூறிய பதில் இதுதான் : ஒரு மோசமான நாள் அந்த உலகக் கோப்பை தொடரை தீர்மானித்து விடாது. மேலும் எனக்கு இந்திய அணியை பலப்படுத்த இன்னும் சில வேலைகள் முடியாமல் இருக்கின்றன. அதனை முடித்து விட்டே நான் இந்திய அணியை விட்டு விலகுவேன்.

Ravi

கேப்டன் கோலியின் தலைமையில் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். வீரர்களுக்கு முன்னுதாரணமாக கோலி திகழ்ந்து வருகிறார். வீரர்களின் உடற்தகுதியில் அதிக கவனம் செலுத்துவதால் இந்திய இனி வரும் காலங்களில் நல்ல முன்னேற்றம் அடையும். இந்திய வீரர்களின் திறன் பற்றி எனக்கு நன்றாக தெரியும். எனவே இன்னும் அணியை பலப்படுத்த விரும்புகிறேன் என்று அவர் கூறிய பதில் அவரை மீண்டும் பயிற்சியாளராக நியமிக்க வைத்தது என்று தேர்வு குழு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Advertisement