ரவி சாஸ்திரிக்கு பக்க பலமாக இவர் இருக்கும் வரை ஒன்னுமே பண்ணமுடியாது. பயிற்சியாளராக தொடர உள்ள ரவி சாஸ்திரி – விவரம் இதோ

Ravi
- Advertisement -

இந்திய அணியின் முதன்மை பயிற்சியாளர் மற்றும் பீல்டிங், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்து வகையான பயிற்சியாளர் பதவியும் நடந்த உலகக் கோப்பைத் தொடரோடு முடிவடைந்தது. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரின் காரணமாக அனைவரது பதவிக்காலமும் 45 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.

ravi

- Advertisement -

அதனைத் தொடர்ந்து பிசிசிஐ அனைத்து பயிற்சியாளர் பதவிக்கும் விண்ணப்பிக்க ஜூலை மாதம் 30 ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. இந்நிலையில் தற்போது இந்திய அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி இந்திய அணியில் தொடர்ந்து பயிற்சியாளராக நீடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்திய பயிற்சியாளர் பதவிக்கு டாம் மோடி, ஜெயவர்த்தனே மற்றும் பிளம்பிங் போன்ற பல்வேறு வீரர்கள் விண்ணப்பித்து இருக்கும்போதும் ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக நீடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் அவர் மீண்டும் வர்ணனையாளராக அல்லது கிரிக்கெட் சம்பந்தப்பட்ட வேறு வேலைகளில் ஈடுபட தற்போது ரவி சாஸ்திரி ஆர்வம் காட்டவில்லை.

Ravi-Shastri

அதுமட்டுமின்றி கேப்டன் விராட் கோலி மற்றும் ரவிசாஸ்திரிக்கும் இடையே இருக்கும் வலுவான பிணைப்பு காரணமாக கோலி அவருக்கு பக்க பலமாக இருப்பதால் கோலி ரவிசாஸ்திரி விட்டுக் கொடுக்காமல் மீண்டும் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வழிமொழிவார். எனவே ரவி சாஸ்திரி மீண்டும் இந்திய அணிக்கு பயிற்சியாளராக நிறைய வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

Ravi

ஆனாலும் ஏற்கனவே பிசிசிஐ பயிற்சியாளர் தேர்வுக்கு கேப்டனின் தலையீடு இருக்கக்கூடாது என்று உறுதியாகக் கூறி விட்டது. இருப்பினும் பயிற்சியாளர் பதவிக்கு தேர்வுக்குழுவின் நேர்காணல் மூலம் ரவி சாஸ்திரி மீண்டும் பயிற்சியாளராக நிறைய வாய்ப்புகள் உள்ளது அதனால் கிட்டத்தட்ட இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தொடரப்போவது உறுதியாகி உள்ளது. ஆகஸ்ட் மாதம் பாதியில் பயிற்சியாளர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement