பாதி சம்பளத்தை ரிட்டர்ன் பண்ணிட்டு இப்போவே வெளியேறுங்க – ஃபார்ம் அவுட் கோலிக்கு ஜாம்பவானின் அட்வைஸ்

Virat Kohli vs CSK
Advertisement

மிகுந்த விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடர் எதிர்பாரா திருப்பங்களுடன் ரசிகர்களை மகிழ்வித்து வெற்றிகரமான 4-வது வார்த்தை கடந்து மும்பை நகரில் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த தொடரில் இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர வீரர் விராட் கோலி படுமோசமான பார்மில் திண்டாடுவது ரசிகர்களுக்கு உண்மையாகவே எதிர்பாராத திருப்பமாகவும் அதிர்ச்சியாகவும் அமைந்துள்ளது. ஒரு ரன் மெஷினாக கருதப்படும் அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களைக் குவித்த பேட்ஸ்மேனாக சரித்திர சாதனை படைத்துள்ள நிலையில் சமீப காலங்களாகவே பெரிய அளவில் ரன்களை எடுக்க தடுமாறி வருகிறார்.

kohli 1

கடந்த 2019-ஆம் ஆண்டு கடைசியாக வங்கதேசத்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் சதமடித்த அவர் அதன்பின் டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என மொத்தம் 102* போட்டிகளாக அடுத்த சதத்தை அடிக்க முடியாமல் திண்டாடி வருகிறார். அதைவிட இந்த வருடம் பெங்களூருவின் 7 மற்றும் 8-வது போட்டிகளில் அடுத்தடுத்து சந்தித்த முதல் பந்திலேயே அவுட்டான அவர் வரலாற்றிலேயே முதல் முறையாக அடுத்தடுத்த போட்டிகளில் கோல்டன் டக் அவுட்டான பரிதாபத்திற்கு உள்ளானார்.

- Advertisement -

வேலையாகாத மாற்றம்:
இத்தனைக்கும் கடந்த காலங்களில் கேப்டனாக இருந்த அவர் அந்த பணிச்சுமை தனது பேட்டிங்கை பாதித்ததாக உணர்ந்த காரணத்தால் கடந்த ஜனவரியில் இருந்து படிப்படியாக அனைத்து கேப்டன் பதவிகளுக்கும் முழுக்கு போட்டு தற்போது சாதாரண வீரராக கேப்டன்ஷிப் அழுத்தமில்லாமல் சுதந்திரப் பறவையாக விளையாடி வருகிறார். ஆனாலும் கூட அவரின் மோசமான பார்ம் முன்னேற்றமடையாமல் மாறாக முன்பைவிட உச்சகட்ட வீழ்ச்சியை கண்டுள்ளது என்றே கூறலாம்.

 

அதை சரி செய்வதற்காக ராஜஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய அவர் அந்த அணி நிர்ணயித்த வெறும் 145 ரன்கள் என்ற இலக்கை சேசிங் செய்த போது 2 பவுண்டரி அடித்து நல்ல தொடக்கம் பெற்றாலும் 9 (10) ரன்களில் அவுட்டாகி மீண்டும் ஏமாற்றமளித்தார். மொத்தத்தில் பழைய ஃபார்முக்கு திரும்ப அவர் செய்யும் அத்தனை மாற்றங்களும் இதுவரை எந்த பலனையும் அளிக்கவில்லை.

- Advertisement -

பாதியிலேயே வெளியேறுங்க:
இந்நிலையில் இந்த மோசமான பார்மலிருந்து விடுபட வேண்டுமெனில் உடனடியாக ஐபிஎல் 2022 தொடரில் பாதியிலேயே விலகுமாறு முன்னாள் ஜாம்பவான் இந்திய வீரர் ரவி சாஸ்திரி கேட்டுக்கொண்டுள்ளார். அடுத்தடுத்த போட்டிகளில் கோல்டன் டக் அவுட்டான போதே விராட் கோலி களைப்படைந்து விட்டதாகவும் அவருக்கு 2 – 3 மாதங்கள் ஓய்வு தேவைப்படுவதாகவும் அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

shastri

அப்படிப்பட்ட நிலையில் நேற்றைய போட்டிக்கு பின் மீண்டும் அதே கருத்தை அவர் அழுத்தமாக வலியுறுத்தி உள்ளார். இது பற்றி யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “அனேகமாக அவருக்கு உடனடியான ஒரு பிரேக் தேவைப்படுகிறது. ஏனெனில் தொடர்ச்சியான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் அவர் சமீபத்தில் அனைத்து வகையான கிரிக்கெட்டுக்கு கேப்டனாகவும் இருந்தார். எனவே ஓய்வு அவருக்கு ஒரு ஞானத்தை கொடுக்கலாம். சில நேரங்களில் நீங்கள் சமநிலையாக இருக்க வேண்டும்.

- Advertisement -

இந்த வருடம் அவர் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் காலடி வைத்து விட்டார். இருப்பினும் நாளை இது மிகப்பெரிய பிரச்சனையை மாறுவதற்கு முன் அடுத்ததாக உள்ள 6 – 7 வருட நல்ல சர்வதேச கிரிக்கெட் கேரியரில் சிறப்பாக விளையாடி முத்திரை பதிக்க விரும்பினால் உங்கள் நலனுக்காக சொல்கிறேன் உடனடியாக ஐபிஎல்’இல் இருந்து வெளியேறுங்கள்”. “ஏற்கனவே 14 – 15 வருடங்கள் நீங்கள் விளையாடி விட்டீர்கள். இனியும் நீங்கள் இந்தியாவிற்காக சிறப்பாக விளையாட வேண்டுமெனில் ஒருசில வரையறைகளை மேற்கொள்ள வேண்டும்.

shastri

இந்தியா ஐபிஎல் தொடரில் விளையாடாது என்பதால் அதுபோன்ற வரையறையை மேற்கொள்ள இதுவே சரியான தருணம். இது போன்ற தருணங்களில் நீங்கள் உங்களது ஐபிஎல் அணி நிர்வாகத்திடம் நான் பாதியில் மட்டும் விளையாடப் போகிறேன் எனவே நீங்கள் என்னுடைய சம்பளத்தில் பாதியை எடுத்துக் கொள்ளுங்கள் என்று வெளிப்படையாக கூறி விட வேண்டும். அது கடினமான முடிவாக இருந்தாலும் சர்வதேச கிரிக்கெட்டில் நீங்கள் ஒரு சிறந்த வீரராக வெற்றிநடை போடுவதற்கு இது முக்கிய பங்காற்றும்” என்று கூறினார்.

- Advertisement -

கடந்த 2017 – 2021 நவம்பர் மாதம் வரை விராட் கோலியின் பெரும்பாலான கேப்டன்சிப் பயணத்தில் பயிற்சியாளராக முக்கிய பங்காற்றிய ரவி சாஸ்திரி கடந்த பல வருடங்களாக அனைத்து விதமான போட்டிகளிலும் அதுவும் கேப்டனாக விளையாடி அவரின் உடம்பும் மனதும் களைப்படைந்துள்ளதால் அவருக்கு உடனடியாக ஓய்வு தேவைப்படுகிறது என்று அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க : நம்ம முடியாத வெற்றி.. இப்படி ஒரு மேட்சை பாத்திருக்கமாடீங்க – கடைசி ஓவரில் குஜராத் வெற்றி பெற்றது எப்படி?

தற்போது 33 வயதாகும் அவர் இன்னும் 6 – 7 வருடங்கள் இந்தியாவுக்காக சிறப்பாக விளையாட வேண்டும் என நினைத்தால் பாதி சம்பளம் மட்டும் கொடுங்கள் எனக் கூறிவிட்டு தற்போதைய ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி ஓய்வெடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement