என்ன ஜோக் பண்றிங்களா? ஸ்டார்ட் ஸ்போர்ட்ஸ் தொலைகாட்சியை கலாய்த்த ரவி சாஸ்திரி.. காரணம் என்ன

Ravi Shastri 3
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் 2023 காலண்டர் வருடத்தில் இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி தொடர்களை தவிர்த்து எஞ்சிய தொடர்களில் சிறப்பாக விளையாடியது. குறிப்பாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்த இந்தியா 2023 ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் போன்ற எதிரணிகளை தெறிக்க விட்டு கோப்பையை வென்றது ரசிகர்களுக்கு ஓரளவு ஆறுதலாக அமைத்தது.

அதே வேகத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற 2023 உலகக் கோப்பையில் லீக் சுற்றில் எதிரணிகளை தெறிக்க விட்ட இந்தியா தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக சாதனை படைத்து செமி ஃபைனலில் வரலாற்றிலேயே முதல் முறையாக நியூசிலாந்தை தோற்கடித்து சாதனை படைத்தது. அந்த வகையில் தொடர்ந்து 10 வெற்றிகளை பதிவு செய்த இந்தியா நிச்சயம் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஜோக் பண்றிங்களா:
ஆனால் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் சுமாராக விளையாடிய இந்தியா 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் பொன்னான வாய்ப்பை நழுவ விட்டது கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது. இந்நிலையில் 2023ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அசத்திய சிறந்த 11 பேர் கொண்ட கனவு அணியை இந்தியாவின் பிரபல ஸ்டார்ட் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

குறிப்பாக ரசிகர்கள் தேர்வு செய்த அந்த அணியில் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகிய 8 இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். அவர்களை தவிர்த்து நியூசிலாந்தின் டார்ல் மிட்சேல், தென் ஆப்பிரிக்காவின் ஹென்றிச் கிளாசின், ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பா ஆகிய 3 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே இடம் பிடித்துள்ளார்கள்.

- Advertisement -

இருப்பினும் 2023 உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியில் அசத்திய டிராவிஸ் ஹெட் போன்ற வெளிநாட்டு வீரர்கள் அந்த அணியில் இல்லாதது ஆச்சரியம் என்றே சொல்லலாம். இந்நிலையில் அதே ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் ரவி சாஸ்திரி ஒரு தலைப்பட்சமாக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த அணியை பார்த்து கிண்டலடித்து பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: 131க்கு ஆல் அவுட்.. போராடிய விராட் கோலி.. மீண்டும் தெ.ஆ மண்ணில் இந்தியா சரித்திரத்தை தவற விட்டது எப்படி?

“இது ஜோக்கா. ரசித் கான் எங்கே? இந்த அணியை தேர்ந்தெடுக்க இந்தியர்கள் மட்டும் ஓட்டு போட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். மிட்சேல் மார்ஷ், ரசித் கான், டீ காக் ஆகியோர் இந்த அணியில் இல்லை. அதை விட உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியில் ஆடம் ஜாம்பா மட்டும் இருக்கிறாரே? ரசித் கானை தேர்ந்தெடுக்காதது என்னால் நம்ப முடியவில்லை. சிறந்த ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவும் – ரசித் கானும் உலகில் அனைத்து வகையான மைதானங்களிலும் அசத்தக்கூடியவர்கள். அவர்களும் இல்லை” என்று கூறினார்.

Advertisement