மும்பை அணி பண்ண ஒரே தப்பு அவரை டீமை விட்டு அனுப்புனதுதான் – ரவி சாஸ்திரி பளீர் பேட்டி

Shastri-1
- Advertisement -

ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை கோப்பையை கைப்பற்றிய ஜாம்பவான் அணியான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஆண்டு நடைபெற்று வரும் 15-வது ஐபிஎல் தொடரில் படு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் இந்த ஆண்டு தற்போது வரை மும்பை அணி விளையாடிய 6 போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளிப் பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது. மிகச் சிறப்பான வீரர்களைக் கொண்டு ஜாம்பவான் அணியாக திகழ்ந்து வந்த மும்பை அணிக்கு இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள நிலை அவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

MI Mumbai Indians

- Advertisement -

ஏனெனில் ரோகித் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், பொல்லார்டு, பும்ரா என நட்சத்திர வீரர்கள் இருந்தும் மும்பை அணி இப்படி தோல்வியை சந்தித்து வருவது ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஆறு போட்டிகளில் மும்பை அணி தோற்று விட்டதால் இனியும் பிளே ஆப் சுற்றுக்கு அவர்கள் முன்னேறுவது ஆரம்ப கட்டத்திலேயே கேள்விக்குறியாகியுள்ளது.

மும்பை அணி பார்ப்பதற்கு பலமாக இருந்தாலும் தொடர்ந்து இப்படி தோல்விகளை சந்தித்து வர பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மும்பை அணியின் சரிவுக்கு என்ன காரணம் என்பது குறித்த தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : மும்பை அணி செய்த ஒரே தவறு என்றால் அது ஹார்திக் பாண்டியாவை விடுவித்தது தான்.

pandya 1

ஏனெனில் மெகா ஏலத்திற்கு முன்னதாகவே அவரை மும்பை அணி தக்க வைத்திருக்க வேண்டும். காயம் காரணமாக அணியில் இருந்து அவரை வெளியேற்றி விட்டனர். ஆனால் கடந்த பல ஆண்டுகளாகவே மும்பை அணிக்காக தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்டிக் பண்டியாவை வெளியேற்றியிருக்க கூடாது. அதேபோன்று க்ருனால் பாண்டியாவையும் ஏலத்தின் போது வாங்கியிருக்க வேண்டும்.

- Advertisement -

ஏனெனில் பாண்டியா சகோதரர்கள் மற்றும் பும்ரா ஆகியோர் ஒன்றாக இருந்தபோது மும்பை அணி பல வெற்றிகளைப் பெற்றது. எனவே திறமையான இளம் வீரர்களை உருவாக்கிய மும்பை அணி அவர்களை வெளியேற்றியது மிகப்பெரிய பின்னடைவை அவர்களுக்கு தந்துள்ளது. நிச்சயம் பாண்டியா போன்ற வீரரை அணியில் இருந்து வெளியேற்றி இருக்கக்கூடாது என்று ரவிசாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : டெல்லி அணிக்குள் ஊடுருவிய கொரோனா பாதிப்பு. ஐ.பி.எல் தொடர் நடைபெறுவதில் சிக்கலா? – வெளியான தகவல்

மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை நடைபெற்றுள்ள 6 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ள வேளையில் அடுத்ததாக வரும் வியாழக்கிழமை அன்று நடைபெறவுள்ள போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. ஐபிஎல் வரலாற்றில் இரு பெரும் ஜாம்பவான் அணிகளான இவ்விரு அணிகளும் மோத இருப்பதால் இந்த போட்டியில் மீதான எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement