டெல்லி அணிக்குள் ஊடுருவிய கொரோனா பாதிப்பு. ஐ.பி.எல் தொடர் நடைபெறுவதில் சிக்கலா? – வெளியான தகவல்

Dc
- Advertisement -

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே உலகெங்கும் பெருகி வந்த கொரோனா அச்சம் காரணமாக இந்தியாவில் ஐபிஎல் தொடர் போட்டிகள் நடைபெறாததால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றத்துடன் இருந்தனர். ஆனால் இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது தான் மெல்ல மெல்ல இந்தியாவில் கொரோனா பரவல் மறைய தொடங்கியதை அடுத்து பிசிசிஐயின் தீவிர முயற்சி காரணமாக இந்த ஆண்டிற்கான பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது சரியாக திட்டமிடப்பட்டு மும்பை மற்றும் புனே ஆகிய இரு நகரங்களில் மட்டுமே குறிப்பிட்ட மைதானங்களில் நடைபெற்று வருகிறது.

IPL 2022 (2)

- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த மார்ச் 26-ஆம் தேதி துவங்கிய இந்த ஐ.பி.எல் தொடரானது இதுவரை நடைபெற்றுள்ள 29 லீக் ஆட்டங்கள் சிறப்பான முறையில் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பிரச்சனை ஐபிஎல் தொடரில் நுழைந்துள்ளது.

அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்னர் டெல்லி அணியை சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டார் என்ற தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து தற்போது மேலும் டெல்லி அணி வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக டெல்லி அணி வீரர்கள் கலந்துகொள்ள இருந்த பயிற்சி ரத்து செய்யப்பட்டது.

KKR vs DC

அதோடு அவர்கள் வேறு எங்கும் செல்லக் கூடாது எனவும் ஹோட்டல் அறையிலேயே மூன்று நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர்களுக்கு விரைவில் பரிசோதனை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்லி அணி அடுத்ததாக பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் போட்டியில் பங்கேற்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

டெல்லி அணியில் தற்போது நட்சத்திர வெளிநாட்டு வீரர் ஒருவருக்கும் மற்றும் அணி நிர்வாகி ஒருவருக்கும் தொற்று உறுதியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை இன்னும் சில வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டால் அடுத்ததாக பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அவர்கள் விளையாட மாட்டார்கள் என்றும் லீக் சுற்று முடிவில் மீண்டும் இந்த போட்டி நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : பாலோ ஆன் பெற்று சரிந்த கவுண்டி அணியை இரட்டை சதமடித்து காப்பாற்றிய நட்சத்திர இந்திய வீரர் – அசத்தல் ஆட்டம்

ஏற்கனவே கடந்த ஆண்டு இதேபோன்று சரியாக திட்டமிடப்பட்டு ஐ.பி.எல் தொடரானது நடைபெற்ற வேளையில் இடையில் சில வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தொடரானாது பாதியில் ஒத்திவைக்கப்பட்டு இரண்டாம் பாதி ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement