- Advertisement -
இந்திய கிரிக்கெட்

எல்லாத்தையும் சாதிச்சாச்சி. இனிமேல் என்ன வேணும் – ரவி சாஸ்திரி நெகிழ்ச்சி

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இதுவரை 5 ஆண்டுகாலமாக இந்திய அணியின் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 2019ஆம் ஆண்டு அவரது பதவிக்காலம் முடிவுக்கு வந்தபோது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் மீண்டும் பயிற்சியாளராக தொடர்ந்து செயல்பட்டார். இந்நிலையில் தற்போது அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடருடன் அவரது பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது.

அதனை தொடர்ந்து அவர் பயிற்சியாளராக செயல்பட விருப்பம் தெரிவிக்காததால் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரை நியமிக்க தற்போது தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது தான் இந்த பயிற்சியாளராக பணியாற்றிய காலத்தில் நிறைய சாதனைகளை செய்துள்ளதாக ரவிசாஸ்திரி மனம் திறந்த பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

எனது பயிற்சியின் கீழ் இந்திய அணி டி20 உலக கோப்பையை கைப்பற்றினால் அது சிறந்த தருணமாக இருக்கும். ஆனால் அதையும் தாண்டி நான் எனது பயிற்சியாளர் பொறுப்பில் நிறைய சாதித்து விட்டேன். ஆஸ்திரேலிய மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை வென்றது. இங்கிலாந்து மண்ணில் தற்போது முன்னிலை பெற்றுள்ளது. அதையும் தாண்டி லார்ட்ஸ் மற்றும் ஓவல் மைதானத்தில் வரலாற்று வெற்றியை பெற்றது என என் மனதிற்கு நெருக்கமான சில வெற்றிகளைப் பெற்று விட்டேன்.

எனது 40 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் இந்த பயிற்சியாளர் பணி தான். அது தவிர ஷார்ட்டர் பார்மெட்டிலும் அணியை முன்னுக்கு கொண்டு வந்துள்ளேன். இதன் மூலம் நான் நினைத்ததை எல்லாம் சாதித்து விட்டதாக ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் : பும்ராவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் செய்ததோடு இந்திய அணியின் டாப் கிளாஸ் வீரர்களுடன் ஓய்வறையை பகிர்ந்துள்ளேன்.

இந்த வெற்றிகள் அனைத்தும் என் நியாபகத்தில் உள்ளது. டி20 உலக கோப்பை தொடரை இந்திய அணி மிகவும் உற்சாகத்துடன் எதிர்கொள்ளும் என்றும் இந்த தொடரில் வெற்றி பெறுவதற்காக அனைத்து வீரர்களும் தங்களது ஒட்டுமொத்த திறனையும் திரட்டுவார்கள் என ரவிசாஸ்திரி நெகிழ்ச்சியான பேட்டி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by