- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டது குறித்து பேசிய முன்னாள் பயிற்சியாளர் – ரவி சாஸ்திரி

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடர் முடிவடைந்த கையோடு தான் பதவி விலகுவாக அறிவித்தார். அதோடு தனது குடும்பத்தாருடன் நேரத்தை செலவிட வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் கேட்டுக் கொண்டதால் பிசிசிஐ-யும் அவரை தொடர்ச்சியாக பயிற்சியாளராக நீடிக்கும்படி வற்புறுத்தவில்லை.

அவரது முடிவுக்கு மரியாதை கொடுத்த பி.சி.சி.ஐ அவரது பதவி விலகலை ஏற்றுக் கொண்டது. அதன் பின்னர் பிசிசிஐ-யின் தீவிர தேடலுக்கு பின்னர் இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்த கௌதம் கம்பீர் இந்திய அணியின் வெற்றிக்கும் உதவுவார் என்பதனால் அவரது நியமனம் உறுதியானது.

இந்நிலையில் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கௌதம் கம்பீர் குறித்து முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி சில விடயங்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : கம்பீர் தற்போது இந்திய அணியில் விளையாடி வரும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருடன் விளையாடியவர்.

- Advertisement -

நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரிலும் அவரது செயல்பாடுகள் சிறப்பாக இருந்தன. இளம் வயதான அவரிடம் ஏகப்பட்ட புதிய ஐடியாக்கள் இருக்கின்றன. அதனால் அவர் நிச்சயம் இந்திய அணியை பெரிய இடத்திற்கு கொண்டு செல்வார். அவரது பதவி நியமனம் அணிக்கு புத்துணர்ச்சி ஊட்டுவதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். கம்பீரை எங்களுக்கு நன்றாக தெரியும்.

இதையும் படிங்க : பென் ஸ்டோக்ஸ் மாதிரி பாண்டியா திறமையானவர்.. ஆனா இதை செய்யாதது ஏமாற்றம்.. ஸ்காட் ஸ்டைரிஸ் ஆதங்கம்

அவர் சிறந்த ஐடியாக்களை கொண்டிருப்பவர். இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் தற்போது உள்ள அணி ஒரு முதிர்ச்சியான அணி. அந்த அணியை வைத்து ஒரு செட்டிலான டீமை உருவாக்க முடியும். நிச்சயம் இந்திய அணி அவரது பயிற்சியின் சிறப்பாக செயல்படும் என ரவி சாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -