- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பும்ரா இப்படி செய்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. அதிருப்தியை வெளிப்படுத்திய – ரவி சாஸ்திரி

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது நேற்று ஜூலை இரண்டாம் தேதி பர்மிங்ஹாம் நகரில் துவங்கியது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக டாசின் போது கேப்டன் சுப்மன் கில் அறிவித்திருந்தார். அதன்படி இந்த போட்டியில் ஜஸ்ப்ரீத் பும்ரா, சாய் சுதர்சன், ஷர்துல் தாகூர் ஆகியோர் நீக்கப்பட்டனர்.

பும்ரா ஓய்வெடுத்து ஏமாற்றம் தான் : ரவி சாஸ்திரி

அவர்களுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், நித்திஷ் ரெட்டி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த போட்டிக்கான இந்திய அணித்தேர்வு சிறப்பாக இருந்தாலும் இந்த அணித்தேர்வின் மீது சில விமர்சனங்களும் உள்ளன.

- Advertisement -

அதிலும் குறிப்பாக முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்த பிறகு முக்கிய பந்துவீச்சாளரான பும்ரா இல்லாமல் இந்திய அணி விளையாடுவது பெரிய பின்னடைவு தரும் என்று பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் பும்ரா ஓய்வெடுத்தது குறித்து முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி பேசுகையில் கூறியதாவது :

பும்ரா அணியில் இடம்பெறாதது நம்ப முடியாத ஒன்றாக இருக்கிறது. ஏனெனில் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் இந்திய அணியானது வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில் உலகின் நம்பர் 1 பவுலரான பும்ரா 7 நாட்கள் ஓய்வுக்கு பிறகும் இந்த இரண்டாவது போட்டியில் விளையாடாமல் வெளியில் இருப்பதை நம்ப கடினமாக இருக்கிறது.

- Advertisement -

ஓய்வெடுக்க வேண்டும் என்று முடிவு செய்யும் அதிகாரம் வீரரிடம் இருக்கக் கூடாது. கேப்டனும் பயிற்சியாளரும் முடிவு செய்தால் எந்த வீரரும் போட்டியில் விளையாடிதான் ஆக வேண்டும் என ரவி சாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது. நேற்றைய முதல்நாள் ஆட்டத்தில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 310 ரன்கள் குவித்துள்ளது.

இதையும் படிங்க : 6, 6, 6, 2, 2, 6.. ஃபெரீரா வெறும் 9 பந்தில் 37.. 5 ஓவர் போட்டியில் மேக்ஸ்வெல் அணியை தெறிக்க விட்ட டிஎஸ்கே

முதல்நாள் ஆட்டநேர முடிவில் சுப்மன் கில் 114 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 41 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி பெரிய ரன் குவிப்பை நோக்கி செல்லும் என்பதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

- Advertisement -