லேட் பண்ணாம அவரை இந்திய அணியில் சேர்த்து பிராக்டீஸ் குடுங்க – இளம்வீரரை ஆதரித்த ரவி சாஸ்திரி

Shastri
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் 15-வது ஐபிஎல் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்னும் ஒரு சில போட்டிகள் முடிவடைந்த பின்னர் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் இத்தொடரானது வருகின்ற 29-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்த சீசன் முழுக்க முழுக்க பல இளம் வீரர்கள் தங்களது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் கூடுதலாக பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.

RCB vs SRH

- Advertisement -

அந்த வகையில் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை தரமான இளம் பாஸ்ட் பவுலர்கள் சிறப்பாக பயன்படுத்தியுள்ளனர். அதிலும் குறிப்பாக இளம் வீரர்களான முகேஷ் சவுத்ரி, சிமர்ஜீத் சிங், குல்தீப் சென், மோசின் கான், உம்ரான் மாலிக் போன்ற பல வீரர்கள் தங்களது அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வரும் இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக தனது அதிவேகப் பந்துவீச்சால் அசர வைத்து வருகிறார். அவரது வேகத்தில் பேட்ஸ்மேன்கள் தடுமாறுவது மட்டுமின்றி விக்கெட்டையும் பறிகொடுத்து வருகின்றனர். குறிப்பாக இந்த தொடரில் 157 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அதோடு வேகமாக பந்துவீசுவது மட்டுமின்றி அவரால் விக்கெட்டையும் வீழ்த்த முடிகிறது என்பதால் விரைவில் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பினை வழங்க வேண்டும் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது ஆதரவை அளித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரியும் உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தனது ஆதரவை வழங்கி உள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : உம்ரான் மாலிக்கிற்கு பிசிசிஐ வருடாந்திர ஒப்பந்தத்தை வழங்க வேண்டும். அவரை விரைவில் அணியில் இணைத்து சீனியர் பவுலர்களுடன் பயிற்சியை வழங்க வேண்டும். ஏனெனில் பும்ரா, ஷமி போன்ற வேகப்பந்து வீச்சாளர்களுடன் அவர் அருகில் இருந்து பழகினால் நிச்சயம் பல விஷயங்களை தனது பந்து வீச்சில் கற்றுக் கொள்வார்.

இதையும் படிங்க : வருங்கால கிரேட் பவுலர், பும்ராவுடன் சேர்ந்து கலக்கப்போறாரு – உம்ரான் மாலிக்கை மற்றுமொரு ஜாம்பவான் பாராட்டு

அதோடு அவருக்கு இந்திய அணியில் பயிற்சி கிடைக்கும் போது நல்ல தன்னம்பிக்கையும் கிடைக்கும். ஆகையால் அவரை விரைவில் அணியில் இணைத்து இந்திய அணியுடன் பயணிக்க வைத்தால் நிச்சயம் எதிர்காலத்தில் பெரிய வீரராக அவர் வருவார் என ரவிசாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement