வருங்கால கிரேட் பவுலர், பும்ராவுடன் சேர்ந்து கலக்கப்போறாரு – உம்ரான் மாலிக்கை மற்றுமொரு ஜாம்பவான் பாராட்டு

- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் பரபரப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த தொடரில் ஆரம்பம் முதலே நிறைய இளம் வீரர்கள் தங்களது அபார திறமையை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டுகளையும் கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர். அந்த வகையில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 22 வயது இளம் வேகப்பந்து வீச்சாளரும் மாலிக் தனது அசுர வேக பந்துகளால் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலை கொடுத்து பல ஜாம்பவான்களின் பாராட்டை பெற்று வருகிறார். கடந்த 2021இல் முதல் முறையாக அறிமுகமாகி ஒருசில போட்டிகளிலேயே அசுர வேகத்தில் பந்து வீசி அப்போதைய இந்திய கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட பலரின் பாராட்டுக்களைப் பெற்றார்.

Umran Malik Pace

அதன் காரணமாக 4 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு சற்றும் யோசிக்காமல் தக்க வைத்த ஐதராபாத் அணி நிர்வாகத்திற்கு இந்த வருடம் பங்கேற்ற 13 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் முடிந்த அளவுக்கு நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்பட்டு வருகிறார் என்றே கூறலாம். அதிலும் சாதாரணமாக 145 கி.மீ வேகப்பந்துகளை அசால்டாக வீசக்கூடிய இவர் இந்த வருடம் 150 கி.மீ வேகப்பந்துகளை தொடர்ச்சியாக வீசுவது பல முன்னாள் ஜாம்பவான்கள் பாராட்டுகளை பெற்று வருகிறது.

- Advertisement -

முன்னேறும் உம்ரான்:
குறிப்பாக டெல்லிக்கு எதிரான ஒரு போட்டியில் 157 கி.மீ வேகப்பந்தை வீசிய அவர் ஐபிஎல் வரலாற்றில் அதி வேகமான பந்தை வீசிய இந்திய பந்து வீச்சாளராக சாதனை படைத்தார். இப்படி இந்திய ஆடுகளங்களிலேயே மிரட்டும் அவர் வேகத்திற்கு கை கொடுக்க கூடிய மைதானங்களை கொண்ட ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் டி20 உலக கோப்பையில் நிச்சயம் சிறப்பாக செயல்படுவார் என்பதால் இந்திய அணியில் அவரை தேர்வு செய்யவேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.

குறிப்பாக சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி போன்ற ஜாம்பவான்கள் இந்திய அணியில் அவர் விளையாடுவதைப் பார்க்க விரும்புவதாக தெரிவித்திருந்தனர். இருப்பினும் வேகத்திற்கு ஈடாக ரன்களையும் வாரி வழங்குவதால் இப்போதைக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்ற விமர்சனத்தையும் உம்ரான் மாலிக் சந்தித்து வருகிறார். ஆனாலும் முடிந்த அளவுக்கு ஒவ்வொரு போட்டியிலும் முன்னேற்றத்தைக் கண்டு வரும் அவர் நேற்றைய மும்பைக்கு எதிரான போட்டியில் கூட 23 ரன்கள் மட்டும் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு பங்காற்றினார்.

- Advertisement -

வாஸ் பாராட்டு:
இப்படி மிரட்டலான வேகத்திலும் தேவையான விவேகத்தை முடிந்த அளவுக்கு புகுத்தி முன்னேற்றத்தை கண்டுவரும் அவருக்கு ஐபிஎல் தொடர் முடிந்ததும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தேர்வுக் குழுவினர் வாய்ப்பளிப்பார்கள் என்று உறுதியாக நம்பப்படுகிறது. இந்நிலையில் ஒவ்வொரு போட்டிக்கு பின்பும் பாராட்டுக்களை அள்ளி வரும் உம்ரான் மாலிக் தற்போது இலங்கையின் ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர் சமிந்தா வாஸ் பாராட்டையும் பெற்றுள்ளார்.

Vass

இலங்கைக்காக 755 விக்கெட்டுகளை எடுத்த அவர் தற்போது “மும்பை கிரிக்கெட் கிளப்” பயிற்சியாளராக இருக்கும் நிலையில் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அவர் (உம்ரான்) ஒவ்வொரு நாளும் முன்னேற்றம் அடைந்து வருகிறார். கடந்த ஐபிஎல் தொடரில் நான் அவரைப் பார்த்தேன். டி20 கிரிக்கெட்டுக்கு தேவையான முக்கியமான தொடர்ச்சியாகவும் துல்லியமாகவும் அவர் பந்து வீசுகிறார். அவர் வருங்கால இந்தியாவின் மிகச்சிறந்த பவுலர். அவருக்கு இந்திய அணி வாய்ப்பளித்தால் பும்ராராவுடன் இணைந்து சிறப்பாக செயல்படுவார். அவர் கடக்க வேண்டிய தூரம் நிறையவே உள்ளது” என்று பேசினார்.

- Advertisement -

தரமான பவுலர்கள்:
உம்ரான் மாலிக் போலவே, முகேஷ் சவுத்ரி, அர்ஷிதீப் சிங் போன்ற நிறைய இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இந்த ஐபிஎல் தொடரில் தங்களது திறமையால் கவனம் ஈர்த்து இந்தியாவிற்கு விளையாடும் அளவுக்கு பெயர் வாங்கியுள்ளனர். அதற்கு காரணம் இந்தியாவின் அடிப்படையான உள்ளூர் கிரிக்கெட் சிறந்த முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளதாக சமிந்த வாஸ் தெரிவித்துள்ளார். அதேபோல் இதே ஐபிஎல் தொடரில் ஹஸரங்கா, சமீரா, தீக்சனா, ராஜபக்சா போன்ற இலங்கை வீரர்களும் அசத்துவது தங்களது நாட்டிற்கு பெருமையாகவும் நல்ல வருங்காலத்தை அமைப்புதாகவும் உள்ளதென்று வாஸ் பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணியின் கேப்டன் பதவிக்கு அவரு செட்டாக மாட்டாரு – வெளிப்படையாக பேசிய ஷான் பொல்லாக்

அது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியாவில் முதல்தர கிரிக்கெட்டின் அடிப்படை அமைப்பு நன்றாக உள்ளது. இங்குள்ள முதல் தர கிரிக்கெட் கிளப் அமைப்புகள் நிறைய தரமான கிரிக்கெட் வீரர்களை உருவாக்கி தருவது இந்திய கிரிக்கெட் முன்னோக்கி நடக்க உதவுகிறது. அதன் காரணமாகவே அவர்களால் நிறைய வேகப்பந்து வீச்சாளர்களையும் தரமான கிரிக்கெட் வீரர்களையும் உருவாக்க முடிகிறது” என்று கூறினார்.

Advertisement