10 வருசம் ஆச்சு, இப்படியே ஆடுனா இந்தியன் டீம்ல இடம் கிடைக்காது – முக்கிய வீரரை விளாசும் ரவி சாஸ்திரி

Shastri-1
- Advertisement -

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புடன் கோலாகலமாக துவங்கி பரபரப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடர் வெற்றிகரமான முதல் வாரத்தை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து பிளே – ஆப் சுற்றுக்கு தகுதி பெற அனைத்து அணிகளும் தற்போது நடைபெற்று வரும் லீக் சுற்றில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த தொடரில் சென்னை, மும்பை உள்ளிட்ட வெற்றிகரமான ஐபிஎல் அணிகள் இதுவரை ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றன. இருப்பினும் பெங்களூரு, பஞ்சாப் போன்ற இதுவரை ஒரு கோப்பையை வெல்ல முடியாத அணிகள் அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்து வெற்றிநடை போட தொடங்கியுள்ளன.

SRH vs RR

- Advertisement -

சொதப்பும் சஞ்சு சாம்சன்:
அந்த வரிசையில் கேரளாவைச் சேர்ந்த நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் தலைமை வகிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. அந்த அணியின் பேட்டிங்கில் ஜோஸ் பட்லர், சிம்ரோன் ஹெட்மயர் போன்றவர்களும் பந்துவீச்சில் ட்ரெண்ட் போல்ட், சஹால் போன்ற வீரர்களும் வெற்றிகளுக்கு பங்காற்றி வருகின்றனர்.

இருப்பினும் அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தொடர்ச்சியாக ரன்களை குவிக்க தடுமாறி வருகிறார். ஏனெனில் ஹைதராபாத் அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெறும் 27 பந்துகளில் 55 ரன்களை அடித்த அவர் மும்பைக்கு எதிரான 2-வது போட்டியில் 21 பந்துகளில் 30 ரன்களை விளாசினார். அந்த 2 போட்டிகளிலும் ராஜஸ்தான் வெற்றி பெற்ற நிலையில் நேற்று நடந்த பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் 8 ரன்களில் அவர் சொதப்ப ராஜஸ்தானும் சொதப்பலாக செயல்பட்டு 2 தொடர் வெற்றிகளுக்கு பின் முதல் முறையாக தோல்வியடைந்தது.

Sanju Samson SRH

10 வருடமாக ஒரே தவறு:
இப்படி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினால் எப்படி இந்திய அணியில் இடம்பிடிக்க முடியும் என்று முன்னாள் இந்திய பயிற்சியாளர் மற்றும் ஜாம்பவான் ரவிசாஸ்திரி சஞ்சு சாம்சனுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இதுபற்றி நேற்றைய போட்டி முடிந்த பின் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த சீசனில் அவர் அமைதியாக காட்சி அளிப்பது அவரின் முதிர்ச்சியைக் காட்டுகிறது. அதனால் இந்த வருடம் அவருக்கு சிறப்பாக அமையும் என்று எனக்கு தோன்றுகிறது. மேலும் இந்த சீசனில் அவர் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படுவார் என நான் கருதுகிறேன். ஏனெனில் கேப்டனாக அவரை சுற்றி நல்ல வீரர்கள் இருப்பதால் அவரால் தொடர்ச்சியாக அவரின் இயற்கையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்”

- Advertisement -

“மைதானத்தின் அனைத்து இடங்களிலும் ரன்கள் அடிக்கும் அளவுக்கு தனக்குள் அனைத்து ஷாட்களையும் கொண்டிருக்கும் அவரிடம் உள்ள ஒரு பிரச்சனை என்னவெனில் அந்த அனைத்தையும் முதல் 5 ஓவருக்குள் விளையாடி விட வேண்டும் என நினைக்கிறார். அதுதான் அவரது பிரச்சனை. அதை விட்டுவிட்டு பிட்ச் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப தேவையான ஷாட்களை மட்டும் அவர் அடித்தால் நிச்சயமாக அவரால் தொடர்ந்து சிறப்பாக செயல்பட முடியும். ஏனெனில் அவர் நீண்ட காலமாக விளையாடி வருகிறார். அவ்வளவு அனுபவத்தை பெற்றுள்ள அவர் 10 வருடங்கள் கழித்தும் மீண்டும் 20 – 25 ரன்கள் எடுத்து சொற்ப ரன்களில் அவுட்டாகும் தவறை மீண்டும் செய்ய கூடாது” என கூறினார்.

rcbvsrr

விராட் கோலியை பார்த்து கத்துக்கோங்க:
அவர் கூறுவது போல கடந்த 2015-ஆம் ஆண்டு இந்தியாவிற்காக முதல் முறையாக அறிமுகமான அவர் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட முடியாத காரணத்தால் நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் திண்டாடி வருகிறார். அதிலும் கடந்த 8 வருடங்களாக இடையிடையே இதுபோல் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியில் கால் பதிக்கும் அவர் அந்த வாய்ப்பை பெரிய அளவில் ரன்கள் குவித்து தக்க வைத்துக்கொள்ள முடியாமல் தொடர்ந்து 8 வருடங்களாகவும் கோட்டை விட்டு வருகிறார். இத்தனைக்கும் அபார திறமைகளை பெற்றிருக்கும் அவர் சுமார் 10 வருடங்கள் கழித்து மீண்டும் அதே தவறை செய்தால் எப்படி இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடிக்க முடியும் என ரவிசாஸ்திரி கேள்வி எழுப்பியுள்ளார்.

- Advertisement -

அத்துடன் இந்த விஷயத்தில் இந்தியாவின் நட்சத்திரம் விராட் கோலியை பார்த்து சஞ்சு சாம்சன் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ரவி சாஸ்திரி கேட்டுக்கொண்டுள்ளார். இதுபற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “எதிரணியின் திட்டங்களை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் விளையாட வேண்டும். இந்த விஷயத்தில் விராட் கோலி மிகவும் முதிர்ச்சியடைந்து கட்டுப்பாடாக செயல்பட்டு பெரிய ரன்களை அடித்து வருகிறார்.

இதையும் படிங்க : நடிச்சா ஹீரோதான்! ஐபிஎல் வரலாற்றில் வித்யாசமான சாதனை படைத்த ஜோஸ் பட்லர், என்னனு பாருங்க

எனவே பந்தை பார்த்து அடித்தால் போதும் என்று நினைக்காமல் விராட் கோலியை போல எதிரணியின் திட்டங்களை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார்போல் சஞ்சு சாம்சன் விளையாடினால் நிச்சயம் அவரால் பெரிய அளவில் வர முடியும்” என கூறினார்.

Advertisement