நடிச்சா ஹீரோதான்! ஐபிஎல் வரலாற்றில் வித்யாசமான சாதனை படைத்த ஜோஸ் பட்லர், என்னனு பாருங்க

Jos Buttler 100 vs MI
- Advertisement -

ரசிகர்களிடம் மிகவும் புகழ்பெற்ற ஐபிஎல் 2022 கோலாகலமாக துவங்கி வெற்றிகரமான முதல் வாரத்தை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 26-ஆம் தேதியன்று மும்பையில் துவங்கிய இந்த தொடர் வரும் மே 29-ஆம் தேதி வரை 2 மாதங்களுக்கு மேல் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது. இதில் வரும் மே 22-ஆம் தேதி வரை நடைபெறும் 70 போட்டிகள் கொண்ட சுற்றில் அபாரமாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற அனைத்து அணிகளும் கடும் போட்டியிட துவங்கியுள்ளன.

கலக்கும் ஜோஸ் பட்லர்:
இந்த தொடரில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன் தலைமையில் விளையாடி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பதிவு செய்து அசத்தியது. அதிலும் முதல் 2 போட்டிகளில் மிகப்பெரிய வெற்றிகளை பதிவு செய்ததால் மற்ற அணிகளை காட்டிலும் அதிக நெட் ரன் ரேட்டை பெற்றுள்ள அந்த அணி 13-வது லீக் போட்டிக்கு பின் புள்ளி பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து கெத்தாக வெற்றிநடை போட்டு வருகிறது.

- Advertisement -

அந்த அணியின் இந்த வெற்றி நடைக்கு அந்த அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்தைச் சேர்ந்த நட்சத்திர தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் பேட்டிங்கில் மிக முக்கிய காரணமாக இருந்து வருகிறார். ஏனெனில் ஹைதராபாத் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 28 பந்துகளில் 35 ரன்களை விளாசிய அவர் வலுவான மும்பைக்கு எதிரான 2வது போட்டியில் அபாரமாக பேட்டிங் செய்து 68 பந்துகளில் சதம் விளாசி 100 ரன்களை குவித்து ஐபிஎல் 2022 தொடரில் சதமடித்த முதல் வீரராக சதனை படைத்தார்.

ஆரஞ்சு தொப்பி பட்லர்:
அதை தொடர்ந்து நேற்று பெங்களூருவுக்கு எதிராக நடந்த 3-வது போட்டியிலும் தொடக்க வீரராக களமிறங்கி நங்கூரமாக நிலைத்து நின்று அபாரமாக பேட்டிங் செய்த அவர் கடைசி வரை அவுட்டாகாமல் 70* ரன்கள் குவித்து மீண்டும் ராஜஸ்தானின் பேட்டிங்கில் முதுகெலும்பாக செயல்பட்டார். இருப்பினும் அந்தப் போட்டியில் 170 என்ற இலக்கை துரத்திய பெங்களூருவுக்கு எதிராக கடைசி நேரத்தில் சொதப்பலான பந்து வீச்சை வெளிப்படுத்தியதால் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் வாய்ப்பை ராஜஸ்தான் கோட்டை விட்டது.

- Advertisement -

மொத்தத்தில் இந்த வருடம் ஆரம்பத்திலேயே எதிரணிகளை பிரித்தெடுக்கும் ஜோஸ் பட்லர் இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளில் 1 அரைசதம் 1 சதம் உட்பட 205 ரன்களை 102.50 என்ற அபாரமான சராசரியில் 143.35 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் குவித்துள்ளார். இதனால் வாயிலாக இந்த வருட ஐபிஎல் தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 13 லீக் போட்டிகளின் முடிவில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள அவர் அதற்கு வழங்கப்படும் கௌரவ ஆரஞ்சு தொப்பியை வென்று சாதனை படைத்து வருகிறார்.

வித்யாசமான சாதனை:
இந்நிலையில் பெங்களூருக்கு எதிரான நேற்றைய போட்டியின் போது ஜோஸ் பட்லர் ஒரு வித்தியாசமான சாதனையை படைத்தார். அதாவது அந்தப் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி அவர் கடைசி வரை அவுட்டாகாமல் 47 பந்துகளை சந்தித்து 6 சிக்சர்களை பறக்க விட்டு 148.94 என்ற ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் 70* ரன்களை குவித்தார். அந்த இன்னிங்ஸ்சின் போது நடிச்சா ஹீரோவாகத்தான நடிப்பேன் என்பதுபோல அவர் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை என்பது ஆச்சரியமளிக்கும் அம்சமாகும். இது பற்றி முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் கூட தனது சமூக வலைதள பக்கத்தில் ஜாலியாக பாராட்டியுள்ளார். ஏனெனில் பொதுவாக சிக்ஸர்களை விட பவுண்டரிகளை அடிப்பதுதான் எளிதான ஒன்றாகும்.

- Advertisement -

அத்துடன் கிரிக்கெட்டில் 99% தருணங்களில் பெரிய இன்னிங்ஸ்களை விளையாடும் பேட்ஸ்மேன்கள் பவுண்டரிகளை அதிகமாகவும் சிக்சர்களை குறைவாகவும் அடிப்பார்கள். அப்படிப்பட்ட நிலையில் இந்த போட்டியில் ஒரு சிக்சர் கூட அடிக்காமல் 70* ரன்களை குவித்த அவர் ஐபிஎல் வரலாற்றில் ஒரு சிக்ஸர் கூட அடிக்காமல் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த பேட்ஸ்மேன் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன் கடந்த 2017-ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக விளையாடிய இந்திய வீரர் நித்திஸ் ராணா 34 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் 7 சிக்ஸர்களை பறக்கவிட்டு 62* ரன்கள் குவித்திருந்ததே இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது.

இதையும் படிங்க : 2022 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் வாங்கப்பட்ட பெஸ்ட் பிளேயர் இவர்தான் – டேவிட் ஹஸ்ஸி புகழாரம்

ஐபிஎல் வரலாற்றில் ஒரு சிக்சர் கூட அடிக்காமல் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த பேட்ஸ்மேன்களின் பட்டியல் இதோ:
1. ஜோஸ் பட்லர் (ராஜஸ்தான்) : 70* ரன்கள் – பெங்களூருக்கு எதிராக, 2022*
2. நிதிஷ் ராணா (மும்பை) : 62* ரன்கள் – பஞ்சாப்க்கு எதிராக, 2017.
3. சஞ்சு சாம்சன் (டெல்லி) : 61 ரன்கள் – குஜராத் லயன்ஸ்க்கு எதிராக, 2017.
4. ராகுல் தேவாடியா (ராஜஸ்தான்) : 53 ரன்கள் – பஞ்சாப்க்கு எதிராக, 2020.

Advertisement