2022 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் வாங்கப்பட்ட பெஸ்ட் பிளேயர் இவர்தான் – டேவிட் ஹஸ்ஸி புகழாரம்

- Advertisement -

கடந்த மார்ச் 26-ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் சரிசமமான பலத்துடன் விளையாடி வருவதால் எந்த அணி கோப்பையை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது. மேலும் இத்தொடரில் பல கோடிக்கு வாங்கப்பட்ட சில வீரர்கள் சோபிக்க தவறிய வேளையில் மிக சொற்பமான விலைக்கு வாங்கப்பட்ட பல வீரர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Umesh Yadav

- Advertisement -

அந்த வகையில் கொல்கத்தா அணியை சேர்ந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் யாதவ் இந்த தொடரில் அந்த அணிக்காக மிக அற்புதமான பவுலிங்கை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி பர்ப்புல் கேப்பை பெற்றுள்ளார்.

2019ஆம் ஆண்டு கடைசியாக இந்திய அணியின் ஒருநாள் போட்டியிலும், 2018ஆம் ஆண்டு டி20 போட்டியிலும் விளையாடிய அவர் அதன் பிறகு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இந்திய அணியில் விளையாடி வருகிறார். ஆனால் இம்முறை ஐபிஎல் தொடரில் அவர் கொல்கத்தா அணிக்கு தேர்வான பிறகு மீண்டும் நிச்சயம் இந்திய டி20 அணியில் திரும்புவதற்காக இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடுவேன் என்று சபதம் செய்திருந்தார்.

Russell Umesh Yadhav

இவ்வேளையில் அவர் கூறியது போலவே தற்போது வரை அவரது மிகச் சிறப்பாக பந்துவீசி வருகிறார். இந்நிலையில் கொல்கத்தா அணியின் ஆலோசகரான டேவிட் ஹஸ்ஸி உமேஷ் யாதவ் குறித்து தற்போது மனம்திறந்த பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

இந்த ஐபிஎல் தொடரில் சிறந்த முறையில் வாங்கப்பட்ட தரமான வீரர் என்றால் அது நிச்சயம் உமேஷ்யாதவ் தான். அவர் தற்போது மிகச்சிறந்த பார்மில் அற்புதமாக பந்து வீசி வருகிறார். எங்களது அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரும் அவரும் நெருங்கிய நட்பு உள்ளவர்கள் என்பதனால் சிறப்பாக பயணிக்கின்றனர்.

இதையும் படிங்க : இலங்கை பவுலரை பார்த்து தெறித்து ஓடும் நட்சத்திர இந்திய வீரர் – ரசிகர்களிடம் கலாய் வாங்கிய பரிதாபம்

உமேஷ் யாதவ் அவரிடம் உள்ள அனுபவத்தை போட்டிகளில் சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார். என்னைப் பொறுத்தவரை இந்த ஆண்டு அற்புதமான வீரராக அவர் திகழ்வார் என டேவிட் ஹஸ்ஸி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement