IND vs AUS : 3 ஆவது ஸ்பின்னர் வேனும்னா இவரை எடுங்க. அதுதான் கரெக்ட் – ரவி சாஸ்திரி கருத்து

Shastri
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி நாக்பூர் மைதானத்தில் துவங்குகிறது. கடந்த 2004-ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியாத காரணமாக இம்முறை எப்படியாவது டெஸ்ட் தொடரை கைப்பற்ற வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகிறது.

Steve Smith Virat Kohli IND vs AUS

- Advertisement -

அதே வேளையில் கடந்த 2012-ஆம் ஆண்டிற்கு பிறகு சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை கூட இழக்காத இந்திய அணியானது இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்வதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பல்வேறு முன்னாள் வீரர்களும் இந்த டெஸ்ட் தொடர் குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இவ்வேளையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி இந்திய அணிக்கு இந்த தொடரில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த சில ஆலோசனைகள் வழங்கி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

Kuldeep-Yadav

இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு அஷ்வினின் பங்கு மிக முக்கியமானது. இருப்பினும் அவரை வைத்து அதிக அளவு வியூகங்களை நாம் வகுக்கக் கூடாது. அதே மாதிரி இந்த டெஸ்ட் தொடரில் மூன்றாவது சுழற்பந்து வீச்சாளர் அணிக்கு தேவைப்படும் பட்சத்தில் குல்தீப் யாதவைத்தான் தேர்வு செய்ய வேண்டும்.

- Advertisement -

ஏனெனில் ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் ஆகிய இருவரும் ஒரே மாதிரி பவுலர்கள். ஆனால் அவர்கள் இருவரை தவிர்த்து குல்தீப் யாதவ் வித்யாசமானவர். பந்தினை இரண்டு புறமும் ஸ்பின் செய்வதில் அவர் வல்லவர். அதுமட்டும் இன்றி முதல் நாள் போட்டியிலேயே பந்தினை டர்ன் செய்ய வேண்டுமென்றால் அது அவரால் மட்டும் தான் சாத்தியம். சுழற்பந்து வீச்சிற்கு சாதகம் இல்லாத மைதானத்தில் கூட குல்தீப் யாதவால் சிறப்பாக பந்து வீச முடியும் எனவே அவரை மூன்றாவது சுழற்பந்து வீச்சாளராக தேர்வு செய்ய வேண்டும் என்று கூறினார்.

இதையும் படிங்க : எல்லாமே நல்லதுக்கு தான். டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ஆரோன் பின்ச் – ரசிகர்கள் ஏமாற்றம்

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ரிஷப் பண்ட் இல்லாதது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவு தான். இருப்பினும் இந்த டெஸ்ட் தொடரில் விக்கெட் கீப்பிங்கில் யார் சிறந்தவரோ அவர்தான் விளையாட வேண்டும் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement