எல்லாமே நல்லதுக்கு தான். டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ஆரோன் பின்ச் – ரசிகர்கள் ஏமாற்றம்

- Advertisement -

கடந்த ஒரு சில ஆண்டுகளாகவே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து பல்வேறு நட்சத்திரங்கள் தொடர்ச்சியாக ஓய்வினை அறிவித்து வருகின்றனர். மேலும் கொரோனா பாதிப்பிற்கு பின்னர் வீரர்களின் ஓய்வு அறிவிப்பு என்பது தொடர்ச்சியாக வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது மற்றும் ஒரு ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரும், கேப்டனுமான ஆரோன் பின்ச் தற்போது டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளார்.

Finch

- Advertisement -

கடந்த 2011-ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான ஆரோன் பின்ச் இதுவரை ஆஸ்திரேலிய அணிக்காக 103 டி20 போட்டிகளில் விளையாடி 3120 ரன்களை குவித்துள்ளார். அதுமட்டும் இன்றி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் போது இவரது தலைமையில் ஆஸ்திரேலியா அணி டி20 உலக கோப்பையையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்பேஷ் தொடரில் விளையாடி வரும் அவர் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

நிச்சயம் என்னால் அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பை தொடரில் விளையாட முடியாது என்று தெரியும். எனவே அணியின் நலனுக்காகவும், அடுத்த டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு ஆஸ்திரேலிய அணி திட்டமிட வேண்டும் என்பதன் காரணமாகவும் தற்போது நான் இந்த ஓய்வு முடிவை எடுத்துள்ளேன்.

- Advertisement -

இதுவரை என்னுடன் பயணித்த என் குடும்பத்தார், நண்பர்கள், அணி வீரர்கள், சக ஊழியர்கள் என அனைவருக்கும் நன்றி. ஆஸ்திரேலிய அணிக்காக நான் சர்வதேச போட்டிகளில் இத்தனை ஆண்டு காலம் விளையாடியதில் மகிழ்ச்சி. அதிலும் குறிப்பாக 2021-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்றது. 2015 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை அணியில் இருந்தது என மறக்க முடியாத நிகழ்வுகள் எனக்கு இருந்துள்ளன.

இதையும் படிங்க : கடப்பாரை டீம்னு சொல்லியே காலியான மும்பை – கெத்து காட்டிய ஜேஎஸ்கே, கலாய்க்கும் சென்னை ரசிகர்கள்

கடந்த 12 ஆண்டு காலம் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடியதை நினைத்து நான் பெருமை அடைகிறேன். இனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் டி20 தொடர்களில் நிச்சயம் பங்கேற்று விளையாடுவேன் என்று ஆரோன் பின்ச் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement