கடப்பாரை டீம்னு சொல்லியே காலியான மும்பை – கெத்து காட்டிய ஜேஎஸ்கே, கலாய்க்கும் சென்னை ரசிகர்கள்

MI vs JSK CSA T20
- Advertisement -

நவீன கிரிக்கெட்டில் பிரீமியர் லீக் டி20 தொடர்கள் விஸ்வரூப வளர்ச்சி கண்டு சர்வதேச கிரிக்கெட்டுக்கு சவால் கொடுத்து வருகிறது. குறிப்பாக ஐபிஎல் போன்ற தொடரால் தரமான அடுத்த தலைமுறை இளம் கிரிக்கெட் வீரர்களும் கோடிக்கணக்கில் வருமானமும் கிடைப்பதை பார்த்து நிறைய வெளிநாட்டு வாரியங்கள் புதுப்புது டி20 தொடர்களை நடத்தி வருகின்றன. அந்த வரிசையில் ஏற்கனவே மசான்சி லீக் என்ற பெயரில் நடத்திய தொடர் தோல்வியில் முடிந்தாலும் மனம் தளராத தென்னாப்பிரிக்க வாரியம் சிஎஸ்ஏ டி20 சேலஞ்ச் என்ற பெயரில் புதிய தொடரை நடத்தி வருகிறது. ஐபிஎல் தொடரில் அணிகளை வைத்துள்ள சென்னை, மும்பை உள்ளிட்ட உரிமையாளர்கள் இத்தொடரில் விளையாடும் 6 அணிகளையும் மொத்தமாக வாங்கியுள்ளனர்.

அதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி 10ஆம் தேதியன்று துவங்கிய இத்தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும் என்பதன் அடிப்படையில் நடைபெற்ற லீக் சுற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வெற்றிக்கு 4 புள்ளிகள், அதிக ரன் ரேட் பெற்றால் போனஸ் புள்ளி என ரசிகர்களை கவர்வதற்காக நிறைய வித்தியாசங்களைக் கொண்ட இத்தொடரில் ஐபிஎல் தொடரில் 4 கோப்பைகளை வென்று 2வது வெற்றிகரமான அணியாக திகளும் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் வாங்கிய ஜொஹனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு பஃப் டு பிளேஸிஸ் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

மும்பையின் பரிதாபம்:
அவரது தலைமையில் முதல் 5 போட்டிகளில் 4 தோல்விகளை பதிவு செய்த ஜேஎஸ்கே ஆரம்பத்திலேயே புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. மறுபுறம் 5 ஐபிஎல் கோப்பைகளுடன் வெற்றிகரமான அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வாங்கிய எம்ஐ கேப் டவுன் அணி ரசித் கான் தலைமையில் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று டாப் இடங்களில் இருந்தது. அதனால் ஐபிஎல் தொடரை போலவே மும்பையை சேர்ந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஜேஎஸ்கே அணியை கலாய்த்தனர்.

அத்துடன் ஐபிஎல் தொடரில் ஒரு கட்டத்தில் கடப்பாரை அணியாக கருதப்பட்ட மும்பை போலவே ரசித் கான் தலைமையில் தேவாலட் பிரேஸ்விஸ், சாம் கரண், டுஷன், ஓடென் ஸ்மித், ஜோப்ரா ஆர்ச்சர், ரபாடா, டிம் டேவிட் போன்ற தரமான நட்சத்திர வீரர்கள் எம்ஐ கேப் டவுன் அணியில் இடம் பிடித்துள்ளார்கள். அதன் காரணமாக நிச்சயம் முதல் சீசனிலேயே எம்ஐ அணி சாம்பியன் பட்டம் வெல்லப்போவது உறுதி என்றும் மும்பை ரசிகர்கள் கெத்தாக பேசினர். ஆனால் 2வது பகுதியில் சொதப்பிய அந்த அணி கடைசியாக களமிறங்கி 7 போட்டிகளில் 1 வெற்றி மட்டுமே பதிவு செய்து மிகப் பெரிய வீழ்ச்சியை சந்தித்தது.

- Advertisement -

மறுபுறம் கடைசி 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்த ஜேஎஸ்கே மடவடவென டாப் 4 இடங்களுக்குள் மீண்டும் நுழைந்தது. மொத்தத்தில் இதுவரை நடைபெற்ற 29 லீக் போட்டிகளில் முடிவில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள ஜேஎஸ்கே 6 வெற்றிகளையும் 3 தோல்விகளையும் பதிவு செய்து 27 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஆனால் கடைசி நேரத்தில் சொதப்பிய மும்பை 10 போட்டிகளில் 3 வெற்றிகளையும் 7 தோல்விகளையும் பதிவு செய்து 13 புள்ளிகளுடன் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

குறிப்பாக ஜேஎஸ்கே அணிக்கு எதிரான தன்னுடைய கடைசி போட்டியிலும் 76 ரன்கள் வித்யாசத்தில் தோற்ற அந்த அணி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் கடைசி இடத்தை பிடித்து லீக் சுற்றுடன் பரிதாபமாக வெளியேறியுள்ளது. அதனால் ஓப்பனிங் முக்கியமல்ல எங்களின் தல தோனியை போல் சிறப்பாக பினிஷிங் செய்வதே முக்கியம் என்று ஜேஎஸ்கே அணியை பாராட்டும் சென்னை ரசிகர்கள் ஆரம்பத்தில் தங்களை கலாய்த்த எம்ஐ ரசிகர்களை பதிலுக்கு கலாய்த்து வருகிறார்கள்.

இதையும் படிங்க:3 வருஷமா கனவோடு காத்திருக்கும் அவருக்கு அறிமுக வாய்ப்பினை குடுங்க – ரசிகர்கள் மத்தியில் பெருகும் ஆதரவு

முன்னதாக 2022 ஐபிஎல் தொடரிலும் மோசமாக செயல்பட்ட மும்பை இந்தியன்ஸ் முதல் முறையாக புள்ளி பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்த நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்க தொடரிலும் கடைசி இடத்தை பிடித்துள்ளது. அதனால் கடப்பாரை அணி என்று சொல்லி சொல்லியே எங்களது மும்பை மீது கண் வைத்து கதையை முடித்து விட்டீர்களே என்று அந்த அணி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரிதாபத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

Advertisement