விராட் கோலி 2 மாசம் ரெஸ்ட் எடுத்தே ஆகனும். ஏன் தெரியுமா? – ரவி சாஸ்திரி கொடுத்த விளக்கம்

shastri
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வந்த விராட் கோலிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மிகவும் சோதனைக் காலமாக அமைந்து வருகிறது. தொடர்ந்து பெரிய ரன் குவிப்பின்றி தடுமாறி வரும் விராட் கோலி நடப்பு ஐபிஎல் தொடரிலாவது பிரம்மாண்டமான ஆட்டத்தினை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் நேற்று லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற 31-வது லீக் போட்டியில் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறியது தற்போது அனைவராலும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.

kohli 1

- Advertisement -

ஏனெனில் மாடர்ன் டே கிரிக்கெட் உலகின் மிகப் பெரிய வீரராக பார்க்கப்படும் கோலி சமீபத்தில் தொடர்ச்சியாக தடுமாறி வருவது அவரின் மீது மிகப்பெரிய கேள்வி எழுப்பியுள்ளது. அதோடு நேற்றைய போட்டியோடு சேர்த்து இதுவரை 100 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி சதம் அடிக்காமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் விராட் கோலியின் மோசமான ஆட்டம் குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் கோலியின் ஃபார்ம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில் : தற்போது உள்ள சூழலில் விராத் கோலிக்கு சிறிது காலம் ஓய்வு தேவை. அவர் இரண்டு மாதங்களாக இருந்தாலும் சரி, ஒன்றரை மாதங்களாக இருந்தாலும் சரி கிரிக்கெட்டில் இருந்து தள்ளி இருக்க வேண்டும்.

Virat Kohli vs CSK

கோலிக்கு தற்போது ஓய்வு நிச்சயம் தேவை. அவர் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஓய்வு எடுத்து மீண்டு வந்தால் தான் அவரால் சிறப்பாக விளையாட முடியும் என்று நினைக்கிறேன். தற்போது உள்ள கோலி புத்துணர்ச்சியை இழந்துள்ளார். தற்போதைய சூழலில் மிகவும் மனச்சோர்வு அடைந்துள்ள கோலி ஒரு சிறிய பிரேக் எடுத்துக் கொண்டால் அவருக்கு நல்லது.

- Advertisement -

அதோடு முறையான ஓய்விற்கு பிறகு நல்ல புத்துணர்ச்சியுடன் கோலி கிரிக்கெட் களத்திற்கு திரும்பினால் மட்டுமே அடுத்த ஆறு ஏழு வருடங்களுக்கு நல்ல கிரிக்கெட் வீரராக பயணிக்க முடியும் என்று கூறியுள்ளார். ரவி சாஸ்திரியின் இந்த கருத்தினை ஆமோதித்து பேசிய இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கூறுகையில் :

இதையும் படிங்க : சரிந்த பெங்களூருவுக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்த முன்னாள் சிஎஸ்கே வீரர்கள்! – தப்பு பண்ணிடீங்களே

விராட் கோலி கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் விலகி இருக்க வேண்டும். அதோடு சமூக வலைதளத்தில் இருந்தும் அவர் தள்ளி இருக்க வேண்டும். ஒரு நல்ல பிரேக் எடுத்துக் கொண்டு அவர் மீண்டும் அணிக்கு திரும்பினால் நிச்சயம் சிறப்பாக செயல்படுவார் என்று பீட்டர்சன் கூறியுள்ளார்.

Advertisement