
இந்திய கிரிக்கெட் அணியானது கடந்த பல ஆண்டுகளாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதற்கு மிக முக்கியமான காரணமாக வீரர்களின் உடற்தகுதி பார்க்கப்படுகிறது. ஆனால் வீரர்களின் உடற்தகுதி ஆரம்பத்தில் அளவிட யோ-யோ டெஸ்ட் தேர்வு கொண்டுவரப்பட்ட போது பல்வேறு வீரர்களும் அதனை எதிர்த்தனர். ஏனெனில் வீரர்களே அந்த தேர்வில் தாங்கள் தோல்வியடைவோம் என்பதை உணர்ந்து அப்போது வேண்டாம் என்று கூறினார்கள்.
ஆனால் இந்திய வீரர்களுக்கு யோ-யோ டெஸ்ட் கட்டாயமாக்கப்பட்ட பிறகு உடற் தகுதியை மேம்படுத்திக் கொண்ட இந்திய வீரர்கள் களத்திலும் முன்பை விட அதிகளவு வேகத்துடன் இருந்தனர். தற்போதுள்ள வீரர்கள் அனைவரும் இப்படி மிகச் சிறப்பான உடற்தகுதியில் இருக்க யோ-யோ டெஸ்ட் மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
விராட் கோலி கேப்டனான பிறகு கொண்டுவரப்பட்ட இந்த தேர்வுக்கு பிறகு அனைவருமே முழு உடற்தகுதியுடன் இருப்பதில் அதிக கவனம் செலுத்தினர். அப்போது ரவி சாஸ்திரி மற்றும் விராட் கோலி ஆகியோரது கூட்டணியில் இந்திய அணி தொடர்ச்சியான வெற்றிகளையும் பெற்று அசத்தியது.
இந்நிலையில் இந்திய அணிக்குள் யோ-யோ டெஸ்ட் கொண்டுவரப்பட முக்கிய காரணமே தோனி தான் என்றும் விராட் கோலி கேப்டனாக இருந்த போதிலும் வீரர்கள் மத்தியில் தோனி தான் அதன் அவசியத்தை புரிய வைத்து யோ-யோ டெஸ்ட்டில் பங்கேற்க பேச்சுவார்த்தை நடத்தினார் என்றும் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :
நாங்கள் ஆரம்பத்தில் அணிக்குள் யோ-யோ டெஸ்டை கொண்டு வரும்போது வீரர்களை சம்மதிக்க வைக்க பெரிய சவால் இருந்தது. ஏனெனில் வீரர்களே தாங்கள் தேர்வாக மாட்டோம் என்ற மனநிலையில் தான் இருந்தார்கள். அதேபோன்று ஒரு சில வீரர்களுக்கு சலுகை கொடுக்கலாம் என்றும் நினைத்தோம். ஆனால் அப்போது அந்த விடயத்திற்குள் வந்த தோனி வீரர்களை ஓய்வறையில் அமர வைத்து அந்த தேர்வு முறையில் உள்ள முக்கியத்துவத்தை புரிய வைத்தார்.
இதையும் படிங்க : 2017இல் வெறும் 16.2 தான்.. அதுக்கே யோசிச்ச இந்திய அணியை.. தோனி தான் யோ-யோ செய்ய வெச்சாரு.. ரவி சாஸ்திரி
அதுமட்டும் இன்றி அனைவரும் யோ-யோ டெஸ்டில் பங்கேற்க தயாராக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். விராட் கோலி கேப்டனாக இருந்த போதும் அணி மீட்டிங்கை தானே முன்வந்து நடத்தி வீரர்களை அனைவரும் சம்மதிக்க வைத்தது தோனி தான் என ரவி சாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.