நியூசிலாந்து தொடரில் இவரே இந்திய அணிக்கு விக்கெட் கீப்பராக செயல்படுவார் – ரவி சாஸ்திரி ஓபன் டாக்

Ravi
- Advertisement -

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பண்ட் தொடர்ந்து தனது பேட்டிங் மற்றும் கீப்பிங் என இரண்டிலுமே சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் தொடர்ந்து அவர் மீது விமர்சனங்கள் ஒவ்வொரு தொடரிலும் எழுந்து வருகின்றன. இந்நிலையில் கடைசியாக நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரிலும் பண்ட் விக்கெட் கீப்பராக அணியில் இடம்பெற்றார்.

Pant 1

- Advertisement -

அந்த தொடரின் இரண்டாவது போட்டியில் தலையில் அடிபட்டு வெளியேறிய பண்டிற்கு பதிலாக ராகுல் விக்கெட் கீப்பிங் செய்தார். அதற்கு அடுத்து மூன்றாவது போட்டியிலும் ராகுல் தொடர்ந்து விக்கெட் கீப்பிங் செய்தார். அந்த இரண்டு போட்டியிலும் ராகுலின் விக்கெட் கீப்பிங் சற்று சிறப்பாகவே இருந்தது. மேலும் ராகுலின் இந்த கீப்பிங் குறித்து பேசிய விராட் கோலி : ராகுல் விக்கெட் கீப்பராக அணியில் இருந்தால் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை அணியில் விளையாட வைக்க முடிகிறது என்று கூறினார்.

அதுமட்டுமின்றி ராகுல் விக்கெட் கீப்பராக செயல்படுவதால் அது அணிக்கு பலம் தான் தற்போது அணியில் எந்தவித மாற்றத்தையும் நாங்கள் எடுக்க விரும்பவில்லை என்றும் இதனை பரிசோதிக்க விரும்புகிறோம் என்றும் கோலி கூறியிருந்தார். இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பண்ட் இந்திய அணியில் தேர்வாகி இருப்பதால் அவர் விக்கெட் கீப்பிங் செய்வாரா ? இல்லை ராகுல் விக்கெட் கீப்பிங் செய்வாரா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Pant-1

இந்நிலையில் இது குறித்து தற்போது பேசிய இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறுகையில் : பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களை போன்று விக்கெட் கீப்பிங்கிலும் சில ஆப்ஷன்கள் இருப்பதை நாங்கள் விரும்புகிறோம். அதுவும் அணிக்கு நல்லதுதான் என்று அவர் பதிலளித்தார். இதன் மூலம் டி20 போட்டிகளில் பண்ட் விக்கெட் கீப்பராக செயல்பட்டாலும், ஒருநாள் போட்டியில் ராகுல் கீப்பராக தொடர்வார் என்று தெரிகிறது.

Advertisement