ரவீந்திர ஜடேஜாவுக்கு அபராதம் விதித்த ஐ.சி.சி – எதிர்த்து கேள்வி எழுப்பிய ரவி சாஸ்திரி

Ravi-Shastri
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியானது நாக்பூர் மைதானத்தில் இன்று நடைபெற்ற மூன்றாவது நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்துள்ளது. இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்த நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

IND vs AUS

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது ஐசிசி-யின் விதிமுறைகளை மீறியதாக இந்திய அணியன் சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜாவிற்கு ஐசிசி 25 சதவீதம் சம்பளத்தை அபராதமாக விதித்துள்ளது.

அதாவது இந்த போட்டியின் போது நடுவர்களுக்கு எந்தவித விவரத்தையும் தெரிவிக்காமல் அவர் வலி நிவாரணி மருந்தினை பயன்படுத்தியதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என ஐசிசி விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில் பந்தை சேதப்படுத்தியதாக ஜடேஜா மீது பரபரப்பான கருத்தும் பரவி வந்தது.

Jadeja

தற்போது இதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக ஐசிசி-யும் அபராதம் விதித்துள்ளதால் ஜடேஜாவிற்கு வழங்கிய இந்த தண்டனை தவறான ஒன்று என அதற்கு பதிலடிக் கொடுக்கும் விதமாக இந்திய அணியில் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : போட்டியின் இடையே வலி நிவாரணிக்கான ஆயின்மெண்டை விரலில் தடவியதை வைத்து எப்படி பந்தினை சேதப்படுத்த முயற்சித்தார் எனக் கூறுகிறீர்கள். அது வெறும் வலி நிவாரணி தான். போட்டியில் இருந்த நடுவர்களே இது பற்றி எதுவும் நடவடிக்கை எடுக்காத போது இதை ஏன் சர்ச்சையாக்குகிறீர்கள்? ஐசிசி இந்த விவகாரத்தில் அவருக்கு தண்டனை வழங்கியதில் என்ன நியாயம் இருக்கிறது?

இதையும் படிங்க : IND vs AUS : பந்தை சேதப்படுத்தல ஆனா – ரவீந்திர ஜடேஜாவுக்கு 2 அதிரடி தண்டனை வழங்கிய ஐசிசி, காரணம் என்ன

நாக்பூர் களத்தில் பந்து ஸ்பின் ஆக எதையும் செய்யத் தேவையில்லை. ஆஸ்திரேலிய அணி வீரர்கள் கூட இந்த பிரச்சனை குறித்து எதுவும் கருத்து தெரிவிக்காத வேளையில் ஐசிசி ஏன் இதனை விவாத பொருளாக மாற்ற வேண்டும் என ரவி சாஸ்திரி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement