இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் பத்தாவது ஐ.சி.சி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. எதிர்வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி துவங்கும் இந்த தொடரானது மார்ச் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள வேளையில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடயிருக்கும் இந்த டி20 உலக கோப்பை தொடரின் இறுதிவரை சென்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இந்த 2 அணிகள் 300 ரன்களை அடிக்கும் : ரவி சாஸ்திரி கணிப்பு
கடந்த 2024-ஆம் ஆண்டு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 அணி உலக கோப்பை தொடரை கைப்பற்றியிருந்த வேளையில் இம்முறை சூர்யகுமார் யாதவின் தலைமையிலான இந்திய டி20 அணியானது நடப்பு சாம்பியனாக இந்த உலக கோப்பை தொடரில் களம் காண இருக்கிறது. அதோடு இந்த டி20 தொடருக்கான இந்திய அணி மிகவும் பலம் வாய்ந்த அணியாக இருக்கிறது.
அதனால் இம்முறையும் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் இந்த 2026 டி20 உலக கோப்பை தொடரின் போது இரண்டு அணிகள் 300 ரன்கள் அடிக்க வாய்ப்புள்ளதாக தனது கணிப்பினை முன்னாள் இந்திய பயிற்சியாளரான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :
இந்த 2026 டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் 300 ரன்கள் அடிக்கும் அணிகளாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் இந்த இரண்டு அணிகளிலுமே பல அதிரடியான வீரர்கள் இருக்கின்றனர். அதோடு 300 ரன்களை டி20 போட்டிகளில் அடிக்க வேண்டுமெனில் துவக்க ஆட்டக்காரர்களில் ஒருவர் சதம் அடிக்க வேண்டும். அதேபோன்று மூன்றாவது இடத்தில் களமிறங்கும் வீரரும் அதிரடியான வீரராக இருக்க வேண்டும்.
இதையும் படிங்க : என்னுடைய அந்த சாதனையை நிச்சயம் சஞ்சு சாம்சன் சமன் செய்வார் – சுரேஷ் ரெய்னா நம்பிக்கை
துவக்க வீரர்கள் அதிரடியான துவக்கத்தை கொடுக்கும் பட்சத்தில் பின்னால் வரும் வீரர்களும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 300 ரன்களை கடக்க உதவுவார்கள். அந்த வகையில் பார்க்கையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணியிடம் அப்படி 300 ரன்களை அடிக்கக்கூடிய வீரர்கள் இருப்பதாக கருதுவதாகவும் ரவி சாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.



