எதிர்வரும் 2026-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ள வேளையில் இந்த தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது நடப்பு சாம்பியனாக பங்கேற்க இருக்கிறது. இந்த டி20 தொடருக்கான பலமான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளையில் நிச்சயம் இம்முறையும் கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து சாதனையை நிகழ்த்தும் என்று பலரும் இந்திய அணியை வாழ்த்தி வருகின்றனர்.
சஞ்சு சாம்சன் நிச்சயம் அசத்துவார் : சுரேஷ் ரெய்னா நம்பிக்கை
அதேவேளையில் இந்த 2026 டி20 தொடரில் எந்தெந்த வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள்? என்பது குறித்த பல்வேறு கணிப்புகளை முன்னாள் வீரர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னாவும் எதிர்வரும் இந்த டி20 உலக கோப்பை தொடரில் அசத்தப்போகும் வீரர்கள் குறித்த சில கருத்துக்களுக்கு பதில் அளித்துள்ளார்.
அந்த வகையில் இதுவரை டி20 உலக கோப்பை தொடரில் சதம் அடித்த ஒரே இந்திய வீரராக இருக்கும் தன்னுடைய சாதனையை சஞ்சு சாம்சன் சமன் செய்வார் என்று சுரேஷ் ரெய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார். தற்போது அண்மையில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் நான்கு ஆட்டங்களில் ஆடிய அவர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து மோசமான பார்மை வெளிப்படுத்தி வருகிறார்.
இவ்வேளையில் அவர் டி20 உலக கோப்பை தொடரில் சதம் அடிப்பார் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளது பலரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : டி20 உலக கோப்பை தொடரை பொருத்தவரை நிச்சயம் சஞ்சு சாம்சன் தனது பார்மை மீட்டெடுத்து சதம் அடிப்பார். ஏனெனில் சஞ்சு சாம்சனிடம் தரமான பேட்டிங் இருக்கிறது.
இதையும் படிங்க : 10-15 நிமிஷம் போதும் ஆட்டம் மாற.. டி20 உலககோப்பைக்கு முன்னர் இந்திய அணியை எச்சரித்த – ரவி சாஸ்திரி
அவர் நிச்சயம் தன்னுடைய முதிர்ச்சியான ஆட்டத்தை எதிர்வரும் உலககோப்பை தொடரில் வெளிப்படுத்துவார் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. ஏனெனில் நிர்வாகத்திடம் இருந்து அவருக்கு முழு ஆதரவு இருப்பதால் நிச்சயம் அவர் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த காத்திருப்பார் என்றும் சுரேஷ் ரெய்னா கூறியது குறிப்பிடத்தக்கது.



