ஜடேஜாவிற்கு சரியான மாற்றுவீரர் இவர்தான். அதுல டவுட்டே இல்ல – தமிழக வீரரை பாராட்டிய ரவி சாஸ்திரி

Shastri
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரானது இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியுடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 51 ரன்கள் குவித்து அசத்தினார்.

Umran-Malik

- Advertisement -

அதனை தொடர்ந்து 220 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது 18 ஓவர்களின் முடிவுகள் ஒரு விக்கெட்டை இழந்து 104 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது. பின்னர் நீண்ட நேரம் ஆகியும் மழை விடாததால் போட்டி வெற்றி தோல்வியின்றி கைவிடப்பட்டதாக அம்பயர்கள் அறிவித்தனர்.

இந்நிலையில் இந்த போட்டியில் தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரியும் வாஷிங்டன் சுந்தரின் சிறப்பான செயல்பாட்டினை பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

Washington Sundar.jpeg

நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடரில் தனக்கு கிடைத்த வாய்ப்பை வாஷிங்டன் சுந்தர் மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். பேட்டிங்கில் அவர் காண்பித்த முதிர்ச்சி அற்புதமாக இருந்தது. கடினமான சூழ்நிலையில் டாப் ஆர்டர் விக்கெட்டுகளை இந்திய அணி அடுத்தடுத்து இழந்தாலும் இவர் பின் வரிசையில் மிகப் பிரமாதமாக பேட்டிங் செய்தார்.

- Advertisement -

அவரது இந்த வளர்ச்சி இனியும் தொடர்ந்தால் இந்திய அணியின் முக்கிய வீரராக அவர் எதிர்காலத்தில் மாறுவார் என ரவி சாஸ்திரி புகழ்ந்து பேசியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்திய அணியில் சுழற்பந்து ஆல்ரவுண்டருக்கான இடத்தினை வாஷிங்டன் சுந்தர் நிரந்தரமாக பிடிப்பார் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது.

இதையும் படிங்க : IND vs NZ : எங்க போனாலும் எங்களை இந்த பிரச்னை பாலோ பண்ணி வருது – கேன் வில்லியம்சன் கருத்து

அதேபோன்று இந்த தொடரில் உம்ரான் மாலிக் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார். அவரது திறமையை கொஞ்சம் கொஞ்சமாக அவர் வெளிக்காட்டி வருகிறார். நிச்சயம் அவருக்கும் நல்ல எதிர்காலம் உண்டு. அதேபோன்று சுப்மன் கில்லும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த தொடர் முழுவதுமே இந்திய அணியின் இளம் வீரர்களுக்கு மிகச் சிறப்பாக அமைந்தது என ரவி சாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement