IND vs NZ : எங்க போனாலும் எங்களை இந்த பிரச்னை பாலோ பண்ணி வருது – கேன் வில்லியம்சன் கருத்து

Kane-Williamson
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது இன்றுடன் முடிவுக்கு வந்தது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி இந்த தொடரை ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் இந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை கைப்பற்றியது.

IND vs NZ Kane Willamson Shikar Dhawan

- Advertisement -

இந்த தொடரின் இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி என இரண்டு போட்டியுமே மழை காரணமாக இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி கைவிடப்பட்டது. குறிப்பாக இன்று கிரிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 219 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பின்னர் 220 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது 18 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 108 ரன்கள் குவித்திருந்த வேளையில் மழை பெய்ததன் காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது.

Seden-Park-Rain

பின்னர் நீண்ட நேரம் ஆகியும் மழை நிற்காததால் போட்டி முடிவுக்கு வந்ததாக அம்பயர்கள் அறிவித்தனர். இந்நிலையில் இந்த ஒரு நாள் தொடர் குறித்து போட்டி முடிந்து பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கூறுகையில் : இது போன்ற தொடர்களில் விளையாடும் போது அணியில் புதுப்புது விடயங்களை செயல்படுத்த விரும்புகிறோம்.

- Advertisement -

இந்த தொடர் சிறப்பாக நடைபெற்றாலும் மழை காரணமாக இரண்டு போட்டிகளை தவறவிட்டது சற்று வருத்தம் தான். இந்த 3 ஆவது போட்டியில் 20 ஓவர்கள் வரை விளையாடியிருந்தால் போட்டியில் முடிவு தெரிந்திருக்கும். ஆனால் இயற்கையை நம்மால் கட்டுப்படுத்த இயலாது. நாங்கள் எங்கு சென்றாலும் மழை எங்களை தொடர்ந்து வருகிறது.

இதையும் படிங்க : அதிர்ஷ்டத்தால் தப்பிய இந்திய அணி. இல்லனா தோல்வி உறுதி ஆயிருக்கும் – டக்வொர்த் லூயிஸ் ரூல்ஸ் சொல்வது என்ன?

இருப்பினும் இந்த தொடரில் நாங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டதாக உணர்கிறேன். இந்த தொடருக்கு பின்னர் சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அணியாக நாங்கள் களத்திற்கு திரும்புவோம் என கேன் வில்லியம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement